Sethu Sir Dinamalar: மேற்கு மாம்பலத்தில் எங்கள் பகுதியில் தினமும் காலை “பழம்மா பழம்…” என்ற பெண் மணியின் ஒலிபெருக்கி சத்தம் கேட்கும்.

[8/31, 03:17] Sethu Sir Dinamalar: மேற்கு மாம்பலத்தில் எங்கள் பகுதியில் தினமும் காலை “பழம்மா பழம்…” என்ற பெண் மணியின் ஒலிபெருக்கி சத்தம் கேட்கும்.

என்னென்ன பழ வகைகள் அன்று விற்பனைக்கு இருக்கிறது என்பதை தன் கையில் இருக்கும் ஒலிபெருக்கியில் குரலை பதிவு செய்து அதை அவ்வப்போது ஒலிபரப்ப செய்வார், வயதான பெண்மணி ஒருவர்.

அன்று அருகில் இருக்கும் பிளாட்டில் வசிக்கும் முதியவர்களுக்கு மூன்று மாடிகள் ஏறி வந்து பழம் கொடுக்க வந்தவர், எங்களிடமும் கேட்க, செவ்வாழை, கொய்யாப்பழம் வாங்கி கொண்டோம்.

இலை, தளைகளோடு வந்த கொய்யா பழங்களால் வீடெங்கும் கொய்யா மணம் வீசியது.

சுவைத்து பார்த்தோம், தித்திப்பு. சென்னையில் இப்படி ஒரு தித்திப்பான கொய்யாப்பழத்தை சுவைத்ததே இல்லை.

திருநெல்வேலி செல்லும் நாட்களில், நெல்லையப்பர் கோவில் வாசலருகே, சைக்கிள்களில், கூடைகளில் குவிக்கப்பட்டு இருக்கும், கொய்யா பழங்கள் மிகுந்த ருசியாக இருக்கும்.

சென்னையில் வாங்கும் கொய்யா பழங்களை, காயாகத் தின்றால்தான் உண்டு. காயாக வாங்கி பழுக்க வைக்க நினைத்து ஏமாந்து போயிருக்கிறேன்.

கொய்யா காய்கள் பழுப்பதற்கு முன்பே வெம்பி போயிருக்கின்றன. ஏமாற்றத்தோடு வெளியே வீசி இருக்கிறோம்.

பழமாக வாங்கி சுவைத்தால், அதில் ருசி இருக்காது.

சென்னையின் கொய்யா விதியை அந்தப் பெண்மணியின் வியாபாரம் மாற்றி எழுதி விட்டது.

இரண்டு நாள் கழித்து வந்தவரிடம் விசாரித்தோம், “இது மானூர் கொய்யா… ” என்றார்.

பல இடங்களிலும் வாழைகாய்கள் மீது ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கும் தகவல் வருவதால், பல நேரங்களில், அதுபோன்று வாழைப்பழம் உண்டு, வயிற்று வலி ஏற்பட்ட அனுபவம் இருப்பதால், ஏற்கனவே வாங்கி பழகிய இடங்களில் மட்டுமே பழங்கள் வாங்கிக் கொண்டிருந்தேன்.

எப்போதும் புன்னகை முகத்துடன் பழ வியாபாரம் செய்யும் அந்த பெண்மணியின் நேர்மையான வியாபாரம் எனக்குள் பூமி மீது புது நம்பிக்கை விதைத்தது.

அட, நல்லவங்களும் நம்ம பக்கம் இருக்காங்க…
[8/31, 06:54] sekarreporter1: super sir

You may also like...