today court news click and read

[23/08, 07:49] sekarreporter1: ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரிய வழக்கில், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில், திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு 49 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை அமைக்க தடை விதிக்கக் கோரி திருப்பூரைச் சேர்ந்த கவுதம் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சாலை அமைப்பது தொடர்பான அறிவிப்பில் 3 கிலோ மீட்டர் 15 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே சாலை அமைப்பதாக கூறியிருந்தாலும், உண்மையில், திருமூர்த்தி மலைக்கும், குருமலைக்கும் இடையிலான தூரம் 8 கிலோ மீட்டர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே காங்கிரீட் சாலை உள்ள நிலையில் புதிய சாலை அமைக்க அனுமதித்தால், விலங்குகள் வேட்டையாடப்படவும், மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படவும் வாய்ப்பாக அமைந்து விடும் எனக் கூறப்பட்டுள்ளது.

வாகனப் போக்குவரத்து அதிகரித்து, உணவு தேடிச் செல்லும் விலங்குகள் உயிருக்கு ஆபத்தாகி விடும் எனவும், புதிய சாலையால் நீர் வழித்தடங்களில் மாற்றம் ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சாலை அமைக்க அனுமதித்தால், வயநாடு போல், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
[23/08, 07:49] sekarreporter1: வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டது இதைபதிவு செய்துகொண்டு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த 2008 ம் ஆண்டு முதல் இதுவரை 15 ஆண்டுகளில் மொத்தம் 15,924 புதிய வழக்கறிஞர்கள் தங்களை பார்கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞர் தொழில் புரிந்து வருகிறார்கள்.

இதில் கடந்த 2008 ம் ஆண்டில் எழும்பூர் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டு, அந்த வழக்கில் 3 வழக்கறிஞர்கள் கைது செய்யபட்டனர்.

2011 ம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் வழக்கறிஞர் சதிஷ்குமார் படுகொலை செய்யப்பட்டு இதுவரை கொலையாளிகளோ, கொலைக்கான காரணமோ வழக்கில் தெரியாத நிலையில் வழக்கு நிலுவையில் உள்ளது.

2013 ம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் நீதிமன்ற பணியை முடித்து வீடு திரும்பி சென்ற போது மர்ம நபர்கள் வழிமறித்து சாலையில் வைத்து கொடுரமான ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

பழிக்கு பழி சம்பவமாக சேலம், ராசிபுரம் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நடராஜன், கடந்த 2013 ம் ஆண்டு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

பழி தீர்க்கும் சம்பவமாக கடந்த 2014 ம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் உணவகத்தில் உணவு அருந்தி கொண்டிருந்த வழக்கறிஞர் நித்தியானந்தம், 4 பேர் கும்பல் வெட்டி சாய்த்தது,

நாயுடன் இரவில் வாக்கிங் சென்ற வழக்கறிஞர் மதியழகன் கடந்த 2014 ம் ஆண்டு தாக்கப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

திருமணத்தை மீறிய உறவில் இருந்த கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சண்முகம் கடந்த 2014 ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2015 ம் ஆண்டு எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் வெற்றியை கொண்டாடிய வழக்கறிஞர் தாக்கப்பட்டு வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை செய்யப்பட்டார்.

மாமல்லபுரத்திற்கு வழக்கு தொடர்ந்தவருடன் சென்ற வழக்கறிஞர் கமலேஷ் கடந்த 2015 ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதே போல், இந்தாண்டு மட்டும் கடந்த மார்ச் மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பணியாற்றிய வழக்கறிஞர் ஜெய் கணேஷ், தென்காசி வழக்கறிஞர் அசோக்குமார்,துத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமாரை தொடர்ந்து
கடந்த ஜூலை 5 ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் வரை 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பல வழக்குகளில் வழக்கறிஞர்கள் குற்றவாளியாகவும் சேர்க்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது வழக்கறிஞர் தொழிலுக்கு அவமானத்தையும், பொதுமக்களுக்கு வழக்கறிஞர் தொழில் மீதான நம்பக தன்மையையும் இழக்கும் நிலையையும் உருவாக்கியுள்ளது.

வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது, வழக்குகளில் குற்றவாளிகளாக வழக்கறிஞர்கள் இருப்பதை தடுக்க
வழக்கறிஞர்களுக்கான தொழில் நடைமுறை சட்டத்தை கடுமையாக அமல்ப்படுத்த வேண்டும் என கடந்த ஜூலை மாதம் 12 ம் தேதி மற்றும் 18 ம் தேதிகளில் மத்திய மாநில அரசுகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை எனக்கூறி சென்னையை சேர்ந்த சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் நீதிபதி பி பாலாஜி அவர்கள் இன்றைக்கு விசாரணை கொண்டது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சில வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகும் படுகொலை தொடர்பாக சில வழக்குகள் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சில வழக்குகளில் குற்றபத்திரிக்கை தாக்க செய்யப்பட்டு இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார் இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வழக்கறிஞர்கள் தொழில் நடைமுறை சட்டத்தை அமல்படுத்தக்கோரி
மத்திய அரசிடம் புதிய மனு அளிக்க மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்
[23/08, 07:49] sekarreporter1: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருச்சி கிளை இயக்குநர் சூசைராஜின் ஜாமீன் மனுவைத் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில், ரூபாய் 2,438 கோடி மோசடி செய்ததாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரைக் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவரான திருச்சி கிளையின் இயக்குநர் சூசைராஜ் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், “இந்த மோசடிக்கும், தனக்கும் எந்தத் தொடர்பு இல்லை எனவும், தன்னிடம் இருந்த சேமிப்புத் தொகையை ஆரூத்ராவில் முதலீடு செய்திருந்ததாகவும், அந்த பணத்தை மீட்டுத் தரக்கோரி ஆரூத்ராவுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்திருந்ததாகவும்” தெரிவித்துள்ளார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக் கொள்வது சூசைராஜன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது

மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார்

இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணை வந்தபோது மீண்டும் சூசைராஜ் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
[23/08, 07:49] sekarreporter1: ஹிஜாவு நிதி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கலைச்செல்வி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மூன்றாவது முறை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கியது ஹிஜாவு நிதி நிறுவனம். 15 சதவீத வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிறுவன இயக்குநர்களில் ஒருவரான கலைச்செல்வி தனது கணவர் ரவிச்சந்திரன் பெயரில் ஆர்.எம்.கே. பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி, ஹிஜாவு நிறுவனத்துக்காக முதலீடுகளை ஈர்த்ததாக கடந்த ஏப்ரல் முதல் வாரம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கலைச்செல்வி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த முறை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

மீண்டும் மூன்றாவது முறையாக கலைச்செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர்கள் வருவான கலைச்செல்வி ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்..
[23/08, 07:49] sekarreporter1: சென்னை சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியின் நிலங்கள் தனிநபருக்கு விற்கப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சிங்காரம் பிள்ளை மேல்நிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாக
சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளிக்கு சொந்தமான நிலங்களை பள்ளி நிர்வாகத்தினர் முறைக்கேடாக தனி நபர் பெயர்களில் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு பள்ளிக்கு சொந்தமான இடங்களில் கட்டிய வீடுகளை இடித்து பள்ளியின் நிலங்களை மீட்க உத்தரவிடக் கோரி பள்ளியின் முன்னாள் மாணவரும், வழக்கறிஞருமான
சிவசுப்பிரமணி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், பள்ளியின் வளாகம் காய்கனி விற்கும் சந்தையாகவும், டென்னிஸ் விளையாடும் இடங்கள் வெளிநபர்கள் விளையாடும் இடமாகவும், பள்ளியின் வாயில் பகுதிகளில் உணகங்கள், கடைகள் என வர்த்தக பயன்பாட்டிற்கும் விடப்பட்டுள்ளதாக மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், குமரேஷ்பாபு அமர்வு,சிங்காரம்பிள்ளை பள்ளியின் நிலம் தனி நபர்களுக்கு விற்கப்பட்டது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கும் தனி நபர்களுக்கும் இடையே கூட்டு சதி ஏதேனும் உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும் பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு உத்தரவிட்டார் மேலும் பள்ளியில் நடந்த விதிமீறல்கள் குறித்து மனுதாரர் 2 வாரத்திற்குள் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு விரிவான புகார் மனு அளிக்க வேண்டும் என்றும் அந்த மனுவின் அடிப்படையில் பள்ளிக்கல்வி துறை இயக்குனர் 12 வாரங்களில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.
[23/08, 07:49] sekarreporter1: அமலாக்கத் துறை வழக்கில் வங்கி மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்தனர்.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது.

ஒரு ஆண்டுக்கு பிறகு கடந்த 8 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சாட்சி விசாரணை தொடங்கியது.

இந்நிலையில் சாட்சிகளின் விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்று வருகிறது. வழக்கில் சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளளராக பணியாற்றிய ஹரிஷ்குமார் கடந்த வாரம் சாட்சியம் அளித்தார்.

அவரிடன் செந்தில் பாலாஜி தரப்பில் இன்று வழக்கறிஞர் கெளதமன் ஆஜராகி குறுக்கு விசாரணை செய்தார் . செந்தில் பாலாஜி, மற்றும் அவரது மனைவி மேகலா, சகோதரர் அசோக் குமாரின் வங்கி கணக்குகள் தொடர்பான விவரங்களை சாட்சி கூண்டில் நின்றவாறு ஹரிஷ்குமார் பதிலளித்தார்.

வங்கியின் ஆவணங்கள், கவரிங் லெட்டர் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் செந்தில் பாலாஜி தரப்பில் குறுக்கு விசாரணையின் கேட்கபட்டது.

குறுக்கு விசாரணை இன்று நிறைவடையவில்லை என்பதால் வழக்கை வரும் 28 தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளிவைத்தார்.

இதனிடையே செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை வரும் 28 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் 56 முறையாக நீட்டிக்கபட்டுள்ளது.
[23/08, 07:49] sekarreporter1: நடைபயிற்ச்சி சென்றபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சம்பத் குமார் என்பவருக்கு இழப்பீடு தொகையாக 5 லட்சம் ரூபாயை வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு மின்சார வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கியது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த சம்பத்குமார் கொரட்டூர், ஜம்புகேஸ்வரர் பகுதியில் தினமும் நடைபயிற்ச்சி மேற்கொண்டு வந்தார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி நடைபயிற்ச்சி சென்ற போது, மழையின் காரணமாக சம்பத்குமார் அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உள்ள இரும்பு தகடுகளில் நின்று கொண்டிருந்தபோது, அதிலிருந்து கசிந்த மின்சாரம் தாக்கி சம்பத்குமார் மரணமடைந்தார்.

இந்த மரணம் தொடர்பாக கொரட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த தன்னுடைய கணவருக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி அவருடைய மனைவி சுந்தரா தேவி மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மின்சார வாரியம் வழக்கு விசாரணையின் போது 5 லட்சத்திற்கான வரைவு காசோலையை சம்பத்குமார் தரப்பிற்கு வழங்கியது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி அதிகமான இழப்பீடு தொகை வேண்டும் என கோரிக்கை வைக்கபட்டுள்ளதால், 2 வாரத்தில் மாவட்ட சட்டபணி ஆணையத்திடம் மனு அளிக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியும், அந்த மனு மீது 4 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க மாவட்ட சட்ட பணிகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
[23/08, 07:49] sekarreporter1: போலி உயர் நீதிமன்ற உத்தரவை தயாரித்த மூன்று பேருக்கு தலா ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜே.கே.கே.  ரங்கம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் அமல்ராஜ், சண்முகம் மற்றும் முருகானந்தம் ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.

இடத்தை காலி செய்யக் கூறியும் காலி செய்யாததால், அறக்கட்டளை நிர்வாகி செந்தாமரை, நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கின் உத்தரவு தனக்கு சாதகமாக வந்ததை அடுத்து, நீதிமன்ற ஊழியர்களுடன் மூவரையும் காலி செய்வதற்கு சென்றுள்ளார். அப்போது, காலி செய்யும் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளதாக கூறி அதற்கான நகலை முருகானந்தம் கொடுத்துள்ளார்.

ஆனால் இது போன்ற எந்த உத்தரவும் நீதிமன்றத்தில் பெறவில்லை எனவும் இந்த உத்தரவு போலியனாது எனவும் செந்தாமரை சார்பில் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடமும் புகார் அளிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவு நகலை போலியாக தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செந்தாமரை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கலாம் என இரு நீதிபதிகள் அமர்வுக்கு கடந்த 2018ம் ஆண்டு பரிந்துரைத்தார்.

இதனையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு
அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சிறப்புக் குழுவை அமைத்து விசாரிக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கு சேர்க்கப்பட்டுள்ள ஏழு பேரில் இரண்டு பேர் உயிரிழந்ததாலும், மீதம் இருவர் மீதான புகாருக்கு முகாந்திரம் இல்லை எனக்கூறி அவர்களை நீதிபதிகள் விடுவித்தனர்.

அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, மூவருக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து, உடனடியாக மூவரையும் புழல் சிறையில் அடைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[23/08, 07:49] sekarreporter1: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைக்கு சொந்தான நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்களை அடையாளம் காண சிறப்பு குழுவை அமைக்க கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை நடைபெற்றுவருகிறது..
கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,
தமிழக அரசுத்தரப்பில் தமிழக அரசு 99 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ள சர்வதேச வள்ளலார் மையத்துக்கு தேவையான சுற்றுச்சூழல் அனுமதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, நகரமைப்பு திட்ட அனுமதி உள்ளிட்ட அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. .
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக் வந்தபோது, சத்திய ஞான சபை அமைந்துள்ள 71 ஏக்கர் பரப்பளவு இடம் வழிபாட்டு இடம் என்பதால் அங்கு எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது என்று மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்
மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம், குற்றச்சாட்டுகளாக சொல்லாதீர்கள் அதில், உள்நோக்கம் உள்ளது என்றும்,

அடிப்படை வசதிகளை செய்து தருவது
மாநில அரசின் பொறுப்பு என்று தெரிவித்தனர்..

கூட்டம் நெரிசலை தவிர்க்கவும், கழிப்பிட வசதி,குடிநீர் வசதி உள்ளிட்ட குறைந்தபட்ச சுகாதார வசதிகளை செய்து தர வேண்டியது மாநில அரசின் கடமை என்று குறிப்பிட்டனர்.

நாளை ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் அரசின் மீது தான் குறை சொல்வார்கள்
என்றும் சுட்டிக்காட்டினா்.

கோவிலுக்கு பக்தர்கள் 106 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ள நிலையில்,
அரசு தரப்பில் 71 ஏக்கர் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்..
அப்போது
இந்து அறநிலையத்துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன்,
கடந்த 1938 ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை இந்த கோவிலை கட்டுப்பாட்டில் எடுத்தபோது 71 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது என்று தெரிவித்தார்.

மேலும் 6.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் இருந்து மீட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் 27 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்..
ஆக்கிரமிப்பாளர்கள் தூண்டுதலினால்தான் கட்டுமானங்களுக்கு இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பில் உள்ள சத்திய ஞான சபைக்கு சொந்தமாக 27 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண,
இந்து அறநிலைத்துறை அதிகாரிகள்,
வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை ஒரு மாதத்தில் அமைத்து அடையாளம் காண வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர்..
சத்திய ஞான சபை மீது அக்கறை உள்ளவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த பட்டியலை தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டனர்.. வழக்கின் விசாரணையை செப்டம்பர் 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

You may also like...