அச்சுறுத்தும் தெரு நாய்களை கொல்வதில் தவறில்லை; மனித உயிர் முக்கியம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Join Channel

முகப்பு

செய்திகள்

தேர்தல் 2024

வீடியோ

சினிமா

அரசியல்

வணிகம்

கூப்பன்கள்

மாவட்டம்

விவசாயம்

தமிழகம்

இந்தியா

இலங்கை

உலகம்

வர்த்தகம்

போட்டோஸ்

ஜோதிடம்

மீம்ஸ்

டெலிவிஷன்

ஆசிரியர் பக்கம்

பிரஸ் ரிலீஸ்
இந்தியா
அச்சுறுத்தும் தெரு நாய்களை கொல்வதில் தவறில்லை; மனித உயிர் முக்கியம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்ற தெரு நாய்களை கொல்வதில் தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த தெரு நாய்களை திருவனந்தபுரம் மாநகராட்சி பிடித்து கொன்றது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 2.5 லட்சம் தெருநாய்களை பிடித்து கொல்ல அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

SC orders local bodies to take steps for control of stray dogs
இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்துக்கு உட்பட்டு நாய்களை கொல்லலாம் என தீர்ப்பு அளித்தது. இதற்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விலங்குகள் நலவாரியமும் தங்களை இணைத்து கொண்டன.

Rottweiler குணமே அப்படிதான்!!! – Pet Groomer Arun | Chennai | Dog | Oneindia Tamil
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. அதில், நாய்களின் வாழ்நாளை விட மனித உயிர்களே மேலானது. விலங்குகள் வதை தடுப்பு சட்டம் மற்றும் பிறப்பு கட்டுப்பாடு விதிகளின் கீழ் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்கள், ரேபிஸ் போன்ற நோய் வாய்ப்பட்ட நாய்களை கொல்ல தடை இல்லை என தீர்ப்பு அளித்தனர்.

மேலும் அனைத்து உயர் நீதிமன்றங்களும் விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான விதிகள் குறித்து எவ்வித உத்தரவும் வழங்க வேண்டாம் எனவும் தங்கள் உத்தரவில் கேட்டுக் கொண்டனர்

You may also like...