அனல் பறக்கும் வாதம். P wilson senior adv in sc தமிழநாடு ஆளுனருக்கு எதிரான வழக்கை வரும் 10 ஆம் தேதி அன்றே விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் வில்சன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு*

*தமிழநாடு ஆளுனருக்கு எதிரான வழக்கை வரும் 10 ஆம் தேதி அன்றே விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் வில்சன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு*

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது

மேலும், “மசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என்பது உட்பட மொத்தம் 13 மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தார்.

தமிழநாடு ஆளுனருக்கு எதிரான வழக்கை வரும் 10 ஆம் தேதி அன்றே விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முறையீட்டு பட்டியலில் சேர்த்த பின்னர் முறையீடு செய்யுமாறு தலைமை நீதிபதி ஆலோசனை தெரிவித்தார்.

You may also like...