அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இன்று அவர் மீது கோவாரன்டோ சனாதனத்திற்கு எதிர்த்து பேசிய வழக்கில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். வாதத்தில் அவர் கூறியதாவது:- அமைச்சர் பதவி பிரமாண உறுதிமொழியை மீறி விட்டனர் என்று கூறி ஐகோர்ட்டு நடவடிக்கை எடுக்க முடியாது

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இன்று அவர் மீது கோவாரன்டோ சனாதனத்திற்கு எதிர்த்து பேசிய வழக்கில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். வாதத்தில் அவர் கூறியதாவது:-
அமைச்சர் பதவி பிரமாண உறுதிமொழியை மீறி விட்டனர் என்று கூறி ஐகோர்ட்டு நடவடிக்கை எடுக்க முடியாது. ஒருவரை அமைச்சராக நியமிப்பதும், நீக்குவதும் முதல்-அமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அந்த அதிகார எல்லையை தடை செய்யப்பட்ட பகுதியாக கருதப்படுகிறது.
இது அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிகார வரையறைக்கு உட்பட்டது.
யார் அமைச்சராக தொடர
வேன்டும் யார் தொடரக்கூடாது என்று முடிவேடுக்க முதலமைச்சர் தான் முடிவு செய்ய முடியும். நீதி மன்றத்திற்கு இதில் தலையிட அதிகாரமில்லை.
அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினாலும், அதை எதிர்த்து தனி நபர்கள் வழக்கு தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 25, மத நம்பிக்கையை மட்டும் பாதுகாக்கவில்லை. நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்ல, ஏன் நாத்திகத்தை ஏற்கிறோம் என்பது குறித்து கருத்து தெரிவிக்கவும் உரிமை வழங்குகிறது. அதனால், சனாதனத்துக்கு எதிராக பேசியதாக இந்த வழக்கே தொடர முடியாது. பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் அதேவேளையில், மாற்றுக் கருத்து உள்ளவர்களின் கருத்துரிமையையும் பாதுகாப்பது முக்கியம். அந்த கருத்துரிமையை பாதுகாப்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் படி இயங்கும் ஐகோர்ட்டின் கடமை.
சனாதனத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு, தீண்டாமை உள்ளது. அவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சேஷசாயி தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளார்.
திருமணத்துக்கு முன்பு உறவு குறித்து நடிகை குஷ்பூ தெரிவித்த கருத்துகளுக்காக அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இதை எதிர்த்து குஷ்பூ தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவர் தெரிவித்த கருத்து பிடிக்கவில்லை என்றால், அவரது கருத்து தவறு என்று பொதுவெளியில் பேசலாமே, அதற்காக குற்றவழக்கு ஏன் தொடர வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
பேச்சுரிமை என்பது ஒருவரின் இயற்கையான மற்றும் அடிப்படைய மனித உரிமையாகும். அதை பாதுகாக்க வேண்டும்.
ஒருவரது பேச்சுரிமை கட்டுப்படுத்த அரசியல் அமைப்புச்சட்டத்தில் 8 காரணங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த 8 காரணங்களில், மனுதாரர் இந்த வழக்கில் கூறியுள்ள காரணம் இடம்பெறவில்லை.
எனவே, தேவையே இல்லாமல் இந்த வழக்கை தொடர்ந்து இந்த ஐகோர்ட்டின் பொன்னான நேரத்தை வீண் அடித்தது மட்டுமல்லாமல், அமைச்சரையும் பதில் மனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.

மாதொருபாகன் என்ற புத்தகத்தை எழுதிய பெருமாள் முருகன் வழக்கில், ஒருவரது கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும். அந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால், அந்த புத்தகத்தை வாங்காதே, படிக்காதே. ஒருவரது பேச்சு பிடிக்கவில்லை என்றால் கேட்காதே, அதற்காக ஒருவரது கருத்துரிமையை தடுக்கமுடியாது. அதை பாதுகாக்க வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சனாதன ஒழிப்பு மாநாடு ஒரு கூட்டரங்கில் காலை முதல் இரவு வரை நடந்துள்ளது. ஏராளமான அறிஞர்கள் பேசியுள்ளனர். அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால் அதை ஏன் ஒட்டு கேட்க வேண்டும்?.. அதை செய்யாமல், அந்த கருத்தை காது கொடுத்து கேட்டு விட்டு, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஒப்பாரி வைத்து கண்ணீர் வடிப்பதை ஏற்க முடியாது. இன்று இந்து முண்ணணி தாக்கல் செயதபதிலில் சனாதனம் நிரந்தரம் அல்ல என்று ஒப்புக்கொண்டு விட்டார்கள் .
இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் சனாதனம் மாறி விட்டது என்று கூறும் பொழுது இந்த வழக்கு அவர்களின் நிலைப்பாடு மாறி எங்கள் பக்கம் வந்து விட்டார்கள் .எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால், அதை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு மூத்த வக்கீல் பி.வில்சன் பேசினார் .

இதையடுத்து இந்த வழக்கு நாளைக்கு (வெள்ளிக்கிழமைக்கு)தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்று எம்.பி., ஏ.ராசா தரப்பில் மூத்த வக்கீல் விடுதலை வாதிட உள்ளார்.

You may also like...