ஆகம வழக்கு ஐகோர்ட் order notice

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் பணியிடங்களை நிரப்ப கோயில் செயல் அலுவலர் கடந்த 2018-ல் அறிவிப்பாணை வெளியிட்டார். ஆனால் இந்த அறிவிப்பு ஆகம விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி, அந்த கோயிலில் பரம்பரை அர்ச்சகராக பணியாற்றிவரும் முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கின் தீர்ப்பு ஆனது சென்ற மாதம் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை, குறிப்பிட்ட ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம். அதற்கு எந்தவொரு ஜாதியும் தடையாக இருக்காது என்று தீர்ட்பு இருந்தது.

இந்த தீர்ப்பு ஆனது ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதிராகவும், சென்னை தலைமை நீதிபதி அமர்வினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதிராகவும் இருப்பதால் முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

இந்த மேல் முறையீடு வழக்கின் முதற் கட்ட விசாரணை ஆனது இன்று தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், மேல் மேல்முறையீட்டாளர் சார்பாக மூத்த வழக்கறிஞர் திரு பி. வள்ளியப்பன் வாதாடினார். அரசு தரப்பில், அரசு தலைமை வழக்கறிஞர் திரு. சண்முகசுந்தரம் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த அமர்வு, மேல்முறையீட்டை கோப்பில் எடுத்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

You may also like...