ஆர்டிஓ அலுவலகத்திற்கு செலுத்தவேண்டும் எனக்கூறி கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை நுகர்வோருக்கு திருப்பி வழங்கும்படி ஆட்டோமொபைல் நிறுவனத்திற்குஉத்தரவிட்ட சென்னைநுகர்வோர் நீதிமன்றம்மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும் உத்தரவிட்டுள்ளது

ஆர்டிஓ அலுவலகத்திற்கு செலுத்தவேண்டும் எனக்கூறி கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை நுகர்வோருக்கு திருப்பி வழங்கும்படி ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு
உத்தரவிட்ட சென்னை
நுகர்வோர் நீதிமன்றம்
மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஜெ.செல்வராஜன் என்பவர் அதேபகுதியில் உள்ள மானசரோவர் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் இருசக்கர வாகனம் ஒன்றை கடந்த 2022ஆம் ஆண்டு வாங்கியபோது, நிறுவனம் குறிப்பிட்ட மொத்த தொகையையும் செலுத்தியுள்ளார்.

ஆனால், வாகனத்தை டெலிவரி செய்யும்போது, ஆரம்பத்தில் குறிப்பிட்ட தொகையை விட கூடுதலாக 3,200ரூபாய் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது.

வாகன பதிவிற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செலுத்த வேண்டும் என கூறி கூடுதலாக வசூலித்துள்ளதாகவும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூபாயை திரும்ப தர உத்தரவிடக்கோரியும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரியும் சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்..
வழக்கானது சென்னையிலிருந்து, விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சதீஸ்குமார்,
ஆர் டி ஓ அலுவலகத்திற்கு செலுத்தவேண்டும் என
கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை 3,200ரூபாயையும், மானுதாரருக்கு திருப்பி தர வேண்டும் என
உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மனுதாராருக்கு மன
உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 20ஆயிரம் இழப்பீடாகவும், வழக்கு செலவு தொகையாக 10ஆயிரம் ரூபாயை வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

You may also like...