ஆளுநரின் அதிகார எல்லையும் தலைப்பில் சட்ட கருத்தரங்கம். ———————————————————————

கழக சட்டத்துறை சார்பில் அரசியல் அமைப்புச்சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் தலைப்பில் சட்ட கருத்தரங்கம்.

—————————————————————————-

ஆம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை என்றாலே பலருக்கும் ஒரு நிமிடம் நடுங்க தான் செய்யும், காரணம் சட்ட அறிவில் ஆகச்சிறந்த கற்றறிந்த வழக்கறிஞர்கள் ஓர் அமைப்பாக செயல்படுவதை பார்த்தால் நடுங்கத் தானே செய்யும்.

அந்த நடுக்கத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தும் விதமாகவும் கற்றறிந்த வழக்கறிஞர்களின் சட்ட அறிவை கூர்மைப்படுத்தும் விதமாக அமைந்தது இந்த கருத்தரங்கம்.

மாலை 5 மணிக்கு தொடங்க இருந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் நண்பர்கள் நீதிமன்ற பணிகளை முடித்துக்கொண்டு சாரை சாரையாக குவியத் தொடங்கினர் கழக வழக்கறிஞர்கள்.

கழக சட்டத்துறை செயலாளர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த விதம் கருத்தரங்கில் கலந்து கொள்ள நீதிமன்ற பணிகள் முடித்த கையோடு செவி விருந்து அருந்த வந்தவர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கும் விதமாக விருந்தோம்பல் அமைந்திருந்தது.

கருத்தரங்கம் தொடங்கியதும் வரவேற்புரை முடிந்து கழக சட்டத்துறை செயலாளர் தன் உரையை தொடங்கினார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து நேரடியாக தலைப்பிற்கு வந்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்டதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எதிர்வினையாற்றிய நிகழ்வை அழகுடன் பகுத்தறிவின் உச்சம் சென்று விளக்கினார்.

“கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அப்படி செயல்பட அவர் மூன்று பேரிடம் மட்டும் தான் ஆலோசனை கேட்டார். முதலில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், அடுத்து பேரறிஞர் பெருந்தகை அண்ணா, பிறகு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரிடத்தில் தான்.

ஆம்! தந்தை பெரியார் வழியில் சுயமரியாதை, தன்மானம் ஆகியவற்றிற்கு இழுக்கு வந்தால் ஒரு போதும் வாய் பொத்தி நிற்கக் கூடாது என்ற நோக்கிலும்

அவை நாகரீகமும் குலையாமல், கடுமையாகவும் நடந்து கொள்ளாமல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து நின்று தமிழ்நாடு என்று பெயரிட்ட பேரறிஞர் பெருந்தகை அண்ணா வழியில்

மாநில சுயாட்சிக்கு கலங்கம் என்றால் அதற்கான முதல் உரிமைக்குரல் நம்முடையதாக இருக்க வேண்டும் என்றுரைத்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் தன் மக்களுக்கான உரிமையையும் காத்து நின்று மாநில சுயாட்சி என்ற கொள்கையிலிருந்து” சற்றும் குறையாமல் தமிழ்நாட்டை வழிநடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் குறித்து நீதிமன்றத்தில் எடுத்துரைப்பது போல் அந்த வீரியம் சற்றும் குறையாமல் எடுத்துரைத்தார் மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் கழக சட்டத்துறை செயலாளர் திரு.என்.ஆர்.இளங்கோ அவர்கள்.

தொடர்ந்து காத்திருக்கிறோம் இது போன்ற பயிலரங்கங்களுக்காக…

இவண்:
வழக்கறிஞர் விக்னேஷ் மாசிலாமணி
சென்னை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் .

You may also like...