இரண்டு வயது குழந்தைக்கு இரண்டு பெரும் புள்ளிகளின் பாச போராட்டம். இறுதியில் வென்றது யார்

இரண்டு வயது குழந்தைக்கு இரண்டு பெரும் புள்ளிகளின் பாச போராட்டம். இறுதியில் வென்றது யார்?

ஜேப்பியாரின் முன்னாள் மருமகன் மேரி வில்சனால் கொண்டு செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தையை மீண்டும் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜேப்பாயரின் முன்னாள் மருமகனான மேரி வில்சனின் சகோதரர் மேரி க்ளாட் தாக்கல் செய்திருந்த மனுவில், நீதிமன்றத்தின் மூலம் தாம் தத்தெடுத்த இரண்டாவது குழந்தையை தமது சகோதரர் சட்ட விரோதமாக கடத்தி சென்று அவரது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறியிருந்தார்.

எனவே அந்த குழந்தையை மீட்டு தம்மிடம் ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென ஆட்கொணர்வு மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். மனுதாரர் சார்பாக வக்கீல் சதீஸ. சுந்தர் ஆஜராகி ,மனுதார்ர் தான் குழந்தையை தத்து எடுத்தார். அவருக்கு தான் குழந்தையை வளர்க்க உரிமை உள்ளது என்றார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர் , எம்.நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜேப்பியாரின் முன்னாள் மருமகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  இந்த குழந்தையை தத்தெடுப்பதற்கு முன்னதாக தனது சகோதரனுக்கு இரண்டு குழந்தை பிறந்த நிலையில் இந்த குழந்தையை தத்தெடுக்க விரும்பியதாகவும், அந்த குழந்தையை வளர்க்குமாறு தம்மிடம் கேட்டுக்கொண்டதாக கூறினார்.

அதன்படி, தனியாக இரண்டு செவிலியர்களை வைத்து குழந்தையை பராமரித்து வந்ததாகவும், தமக்கு குழந்தைக்கும் இடையே பாசமான இணக்கம் இருந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில், தம்முடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னை காரணமாக குழந்தையை சட்ட விரோதமாக வைத்துள்ளதாக குற்றம்சாட்டுவதாக கூறினார்.

இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், குழந்தையை மேரி க்ளாட்- டம் உடனடியாக ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...