மோசடியாக நிலம் விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.judge chandrasekar

மோசடியாக நிலம் விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சவுமியா என்பவர் தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் தமது கணவர் ஞான்சண்முகத்திற்கு சொந்தமாக 5.9 ஏக்கர் நிலம் இருந்ததாகவும், அவர் மறைந்த பிறகு அந்த நிலம் தமக்கு சொந்தமானது என கூறியுள்ளார்.

ஆனால் தமது கணவரின் நண்பராக இருந்த கதிர் வேலு முறைகேடு அந்த நிலத்தை தமது பெயருக்கு மாற்றிவிட்டதாகவும் இது தொடர்பாக கதிர்வேலு மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யக்கோரி அளித்த மனு குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

எனவே கதிர்வேலு மீது நில மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கதிர்வேலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரான சவுமியா ஞானசண்முகத்தின் மனைவி இல்லை எனவும் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் குறித்து கூடுதல் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக கூறினார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், இந்த விவகாரம் தொடர்பாக மூன்று விற்பனை பத்திரங்கள் மற்றும் இறந்த ஞான்சண்முகத்தின் இறப்பு தேதி உள்ளிட்டவை முன்னுக்கு பின் முரணாக உள்ளதால் இந்த விவகாரம் குறித்து கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விவகாரம் கூடுதல் விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைக்க சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி விசாரணை முடிவில் முறைகேட்டில் ஈடுப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...