எடப்பாடி பழனிசாமி உதவுயாளர் அரசியல் பின்பலம். aag raman lal நீதிபதி என்.சதீஷ்குமார் கிடிக்கி பிடி உத்தரவு நீதிபதி, ‘கடனாக ரூ.24 கோடி கொடுத்தோம். ரூ.12 கோடி கொடுத்தோம் என்று இந்த புகார்தாரர்கள் கூறுயுள்ளனர். இவ்வளவு பெரிய தொகைக்கு வருமான வரிக் கணக்கு காட்டப்பட்டதா? notice to ,ed income tax

சென்னை, செப்.7-

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் கிராமத்தில் 4 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் மறுத்ததால், அந்த நிலத்தை வாங்க உள்ள டி.சி.இளங்கோவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமன்லால் ஆஜராகி தன் வாதத்தில் கூறியதாவது:-
நவீன் பாலாஜி, மாணிக்கவேல் ஆகியோரிடம் இருந்து நிலத்தை வாங்கும் மனுதாரர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் மருமகன் ஆவார். நிலத்தை விற்பனை செய்பவர்களுக்கு ரூ. 24 கோடி மற்றும் ரூ.12 கோடி கடன் கொடுத்ததாக வேலு, பொன்ராஜா ஆகியோர் கூறுகின்றனர். கார்த்திகேயன், ராம்ராஜ் ஆகியோரும் கடன் கொடுத்ததாக கூறுகின்றனர். இந்த 4 பேரும், இந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்துள்ளனர். இதில், கார்த்திகேயன், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமின் உதவியாளர் ஆவார். அரசியல் பின்புலம் கொண்ட இந்த விவகாரத்தில் ஏராளமான பிரச்சினை உள்ளன. புகார்கள் வந்ததால், சார் பதிவாளர் நிலத்தின் பத்திரப்பதிவை மேற் கொள்ள மறுத்து விட்டார். அதனால், மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை கேட்ட நீதிபதி, ‘கடனாக ரூ.24 கோடி கொடுத்தோம். ரூ.12 கோடி கொடுத்தோம் என்று இந்த புகார்தாரர்கள் கூறுயுள்ளனர். இவ்வளவு பெரிய தொகைக்கு வருமான வரிக் கணக்கு காட்டப்பட்டதா? என்பது தெரியவில்லை. அதனால், இந்த வழக்கில் வருமான வரித்துறையையும், மத்திய அமலாக்கப்பிரிவையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன். அதுமட்டுல்ல புகார் கொடுத்துள்ள கார்த்திகேயன் உள்பட 4 பேரையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன். இவர்கள் அனைவரும் பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன்’’ என்று கூறியுள்ளார்

You may also like...