super order நீதிபதி RMT.டீக்காராமன், சிறுவனின் உடலில் 9 இடங்களில் காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் இருந்து தெரியவருகிறது என்றும், சிறுவன் அளித்த வாக்குமூலத்திலும் தந்தையால் கொடுமைபடுத்தப்பட்டது தெளிவாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதே நிலையில் விட்டிருந்தால், சிறுவன் சில நாட்களில் இறந்திருப்பார் எனத் தெரிவித்த நீதிபதி, மகனை மெல்ல மெல்ல கொல்லும் வகையில் நடந்து கொண்ட பன்னீர்செல்வத்தை குற்றவாளி என மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு சரியானது தான் என தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது பன்னீர்செல்வம் மனம் திருந்தி, வழக்கறிஞர் கிளார்காக இலவச சட்ட உதவிகள் வழங்கி வருவதால், 5 ஆண்டு சிறை தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்ட நீதிபதி, சிறுவனை மீட்க உதவிய பக்கத்து வீட்டுகாரருக்கும், உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய கோடம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கும் பாராட்டு

பிறப்பில் சந்தேகப்பட்டு மகனை கொடுமைப்படுத்திய தந்தைக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த என்.பன்னீர்செல்வம் மற்றும் லூர்து மேரி ஆகியோர் காதலித்து திருமணம் முடித்து வாழ்ந்துவந்தனர். இவர்களின் இரு மகன்களில் மூத்த மகன் தன்னை விட நிறமாக இருந்ததால், அவருடைய பிறப்பில் பன்னீர்செல்வம் சந்தேகம் அடைந்து, உணவு உடை ஆகியவற்றை கொடுக்காமல் கழிப்பறை அடைத்தும், சிகரெட்டால் சூடுவைத்தும் கொடுமைபடுத்தி உள்ளார்.

பக்கத்து வீட்டுக்காரர் அளித்த தகவலின் அடிப்படையில் சிறுவனை காவல்துறை மீட்ட நிலையில், தன்னையும் கொடுமைப்படுத்துவதாக கணவர் பன்னீர்செல்வம், அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோருக்கு எதிராக கோட்மபாக்கம் காவல் நிலையத்தில் லூர்து மேரி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், பன்னீர்செல்வத்திற்கு 5 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்தும், தாய் மற்றும் சகோதிரியை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி RMT.டீக்காராமன், சிறுவனின் உடலில் 9 இடங்களில் காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் இருந்து தெரியவருகிறது என்றும், சிறுவன் அளித்த வாக்குமூலத்திலும் தந்தையால் கொடுமைபடுத்தப்பட்டது தெளிவாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதே நிலையில் விட்டிருந்தால், சிறுவன் சில நாட்களில் இறந்திருப்பார் எனத் தெரிவித்த நீதிபதி, மகனை மெல்ல மெல்ல கொல்லும் வகையில் நடந்து கொண்ட பன்னீர்செல்வத்தை குற்றவாளி என மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு சரியானது தான் என தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது பன்னீர்செல்வம் மனம் திருந்தி, வழக்கறிஞர் கிளார்காக இலவச சட்ட உதவிகள் வழங்கி வருவதால், 5 ஆண்டு சிறை தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்ட நீதிபதி, சிறுவனை மீட்க உதவிய பக்கத்து வீட்டுகாரருக்கும், உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய கோடம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

You may also like...