ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிச் சென்று விபத்தில் பலியான டிரைவருக்கு, 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, வாகன உரிமையாளருக்கு பணியாளர் இழப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிச் சென்று விபத்தில் பலியான டிரைவருக்கு, 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, வாகன உரிமையாளருக்கு பணியாளர் இழப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பம்மலைச் சேர்ந்த பொன்னழகி என்பவருக்கு சொந்தமான காரின் டிரைவராக குரோம்பேட்டையைச் சேர்ந்த லோகராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 6 ம் தேதி தாம்பரம் – புழல் புறவழிச்சாலையில் கள்ளிக்குப்பம் அருகில் நடந்த விபத்தில் லோகராஜ் மரணமடைந்தார்.

பணியின் போது இறந்த லோகராஜுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி வாகன உரிமையாளர் பொன்னழகி மற்றும் கார் காப்பீடு செய்யப்பட்ட தனியார் வங்கிக்கு எதிராக லோகராஜின் தாய் பானுமதி, சென்னை பணியாளர் இழப்பீட்டு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த பணியாளர் இழப்பீட்டு ஆணையம், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்க அனுமதித்த கார் உரிமையாளர், 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை, விபத்து நடந்த நாளில் இருந்து 12 சதவீத வட்டியுடன் 30 நாட்களில் ஆணையத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

You may also like...