கடந்த 2001 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் கோவில் நிர்வாகத்தில் தலையிட முடியாது என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் கோவில் நிர்வாகத்தில் தலையிட முடியாது என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள அருள்மிகு ஶ்ரீசுந்தர விநாயகர் கோவில் விவகாரங்களில் தலையிட புதுச்சேரி மாநில அரசுக்கு தடைவிதிக்ககோரியும், ஏனாமில் உள்ள ஶ்ரீ வெங்கடேஷ்வரா தேவஸ்தானத்தை நிர்வகிக்க புதிய அறங்காவலர்களை நியமித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரபட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், கோவில் நிர்வாகங்களில் தலையிட வகை செய்யும் புதுச்சேரி இந்து மத நிறுவனங்கள் சட்டப்பிரிவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், கோவில் நிர்வாகங்களில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என வாதிடப்பட்டது.

புதுச்சேரி அரசு தரப்பில், சட்டப்பிரிவு ரத்து செய்யபட்டதை எதிர்த்து தொடரபட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிம்னறம், இதே விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கில் நிவாரணம் தேடிக் கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும், நிலுவையில் உள்ள வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும்வரை கோவில்களை அரசு நிர்வகிக்கலாம் என வாதிடப்பட்டது. மேலும் இது சம்பந்தமாக புதிய சட்டம் இயற்றபட இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, ரத்து செய்யபட்ட சட்டபிரிவுகளின் கீழ் அரசு தனது அதிகாரத்தை செயல்படுத்த முடியாது எனக்கூறி, ஶ்ரீ சுந்தரமூத்தி விநாயகர் விவகாரத்தில் அரசு தலையிட தடைவிதித்தும், ஏனாமில் உள்ள ஶ்ரீ வெங்கடேஷ்வரா தேவஸ்தனத்திற்கு புதிய அறங்காவலர்கள் நியமித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டார்.

You may also like...