ஜாமீன் பெற்ற. பிறகும் பிடிவாரண்ட், பி.டி வாரண்ட் எதுவும் இல்லாமல் 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண்ணை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்.

சென்னை, ஜூலை 2: ஜாமீன் பெற்ற. பிறகும் பிடிவாரண்ட், பி.டி வாரண்ட் எதுவும் இல்லாமல் 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண்ணை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்.

திருநின்றவூரை சேர்ந்தவர் காஞ்சனா (55). இவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கடந்த 2019 மே 22ல் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் அவர் 2019 ஜூலையில் ஜாமீனில் வெளிவந்தார். அவர் மீது அதே ஆண்டு டிசம்பரில் போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றச்சாட்டுகள் பதிவுக்காக அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியபோது அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து, காஞ்சனா நீதிமன்றத்தில் சரண்டரானார். பிடிவாரண்ட் திரும்ப பெறப்பட்டது. இந்த நிலையில், 2022 ஜூலை 26ம் தேதி வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. ஆனால், அப்போது அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் 2022 ஆகஸ்ட் 13ம் தேதி வேறு ஒரு வழக்கில் காஞ்சனா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால், அவர் மீது பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளதாக கூறி புழல் சிறை நிர்வாகம் அவரை சிறையிலிருந்து வெளியே அனுப்ப மறுத்துவிட்டது.
இதையடுத்து, காஞ்சனா போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தன்னை புழல் பெண்கள் சிறையிலிருந்து வெளியே அனுப்ப உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.எஸ்.சீனிவாசன் ஆஜராகி, காஞ்சனாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அவர் மீது எந்த பிடிவாரண்டும் இல்லை. ஆனால், அவர் கடந்த 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டார். அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜராகி, மனுதாரரை வெளியே விடுவதில் ஆட்சேபனை இல்லை என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் காஞ்சனாவை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்

You may also like...