கடுமையாக உழைத்தால் நினைத்த இடத்தை அடையலாம் என பணி நிறைவு வழியனுப்பு நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திர சேகரன் தெரிவித்தார்.

[01/05, 07:40] கடுமையாக உழைத்தால் நினைத்த இடத்தை அடையலாம் என பணி நிறைவு வழியனுப்பு நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திர சேகரன் தெரிவித்தார்.:


[01/05, 07:43] sekarreporter1: இலக்கை நிர்ணயித்து கடுமையாக உழைத்தால் நினைத்த இடத்தை அடையலாம் என பணி நிறைவு வழியனுப்பு நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திர சேகரன் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திர சேகரன் மே 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் வழியனுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் உரையாற்றிய தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே நீதிபதியாக பணியாற்றிய ஜி. சந்திர சேகரன் 17,000க்கும் அதிகமான வழக்குகளை முடித்து வைத்துள்ளதாக கூறினார்.

நிகழ்ச்சியில் ஏற்புரை ஆற்றிய நீதிபதி ஜி.சந்திர சேகரன்,
நீதிபதியாக வேண்டுமென பலருக்கு ஆசை இருந்தாலும் ஒரு சிலருக்கே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதியாக மன நிறைவுடனும், பெருமையுடனும்  பணி ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.

தமிழ் வழியில் பள்ளி படிப்பை முடித்ததாக குறிப்பிட்ட நீதிபதி ஜி.சந்திர சேகரன் இலக்கை நிர்ணயித்து செயல்பட்டால்  நினைத்த இடத்தை அடையலாம் என இளம் வழக்கறிஞர்களுக்கு அறிவுரை கூறினார்.

நீதிபதி ஜி.சந்திர சேகரன் ஓய்வு பெற்றதை அடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 65ஆக குறைந்து காலியிடங்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரிக்கிறது.

You may also like...