கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த வழக்கில் இருந்து டிவிட்டர் நிறுவனத்தை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த வழக்கில் இருந்து டிவிட்டர் நிறுவனத்தை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.j

தனக்கு எதிராக ட்விட்டர் சமூக ஊடகத்தில் ‘மீ டு’ புகார் தெரிவித்தது தொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன் சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுடன் சுசிகணேசன் இணைவது போன்ற விவகாரங்கள் சமூக வலைதளங்களில் கடந்த ஆண்டு மீண்டும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சுசி கணேசன் குறித்து லீனா மணிமேகலையும், சின்மயியும் கருத்துக்களை பதிவிட்டனர்.

உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தனக்கு எதிராக லீனா மணிமேகலையும், பின்னணி பாடகி சின்மயியும் பரப்பி வருவதாகவும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஃபேஸ்புக், கூகுள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களும், ((தி நியூஸ் மினிட்)) இணையதள செய்தி நிறுவனமும் பரப்பி வருவதால், தன்னைப் பற்றிய அவதூறு கருத்துக்களை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டுமெனவும் இயக்குனர் சுசி கணேசன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள தங்களை நீக்க கோரி டிவிட்டர் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, டிவிட்டர் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் நிறுவனம் என்பது ஒரு சமூக ஊடக வலைதளம் என்பதால், சுசி கணேசன் தொடர்ந்த வழக்கில் இருந்து தங்களை நீக்க வேண்டும் என வாதிட்டார்.

ஆனால் டிவிட்டர் நிறுவன தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, வழக்கு குறித்து லீனா மணிமேகலை, சின்மயி, கூகுள், பேஸ்புக், டிவிட்டர், தி நியூஸ் மினிட் ஆகியோர் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 13ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

You may also like...