கீழ் மருவத்தூர் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா. Chief justice பரபரப்பு கேள்வி அரசு கூறுவது உண்மையா ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர் cj order

மேல்மருவத்தூர் பேருந்து நிலையம் அருகே கீழ் மருவத்தூர் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல் மருவத்தூர் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கீழ் மருவத்தூர் ஏரியை ஆக்கிரமித்து, கடைகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும், சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டதாக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனவும், வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, வழக்கறிஞர் கே.ஏ.பிரபாகரனை, வழக்கறிஞர் ஆணையராக நியமித்து உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...