குற்ற வழக்கு நிலுவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110-ன் படி நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென்று வழக்கறிஞர் ரகுநாத் கோரிக்கை:*

*குற்ற வழக்கு நிலுவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110-ன் படி நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென்று வழக்கறிஞர் ரகுநாத் கோரிக்கை:*

வழக்கறிஞர் ரகுநாத் அவர் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் இன்று கொடுக்கப்பட்ட அந்த மனுவில், மேலும் தாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 17 வருடமாக வழக்கறிஞ்சராக பணியாற்றிவருகிறேன். 

தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் காரணத்தினால் தேர்தல் நடைமுறை அமலில் உள்ளது. ஆகையால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள குற்ற பின்னணி உள்ள நபர்களிடம் கட்டாயமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110-ன் கீழ் அவர்களிடம் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டு,மேலும் அவர்களை குற்றச்செயலில் ஈடுபடாமல் தடுப்பது பாராட்டுதற்குரியது.

ஆனால் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த ஆணையுறுத்தி பத்திரத்தில் தெளிவாக அவர்கள் மீது எத்தனை வழக்கில் நிலுவையில் உள்ளது எனகுறிப்பிட்டு உள்ளனர்.

 ஆனால் அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110 -ன் கீழ் நடவடிக்கை எடுக்காமல் ஒருதலை பட்சமாக தமிழ் நாடு காவல் துறை அதிகார துஷ்ப்ரயோகம் செய்து வருகிறது. மேலும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது 110 Cr.P.C  படி நடவடிக்கை எடுக்கும்படி. அந்த அந்த மாவட்ட கண்பாணிப்பாளர்களிடம் இதுகுறித்து கேட்டதற்கு அவர்களுக்கு மாவட்ட காவல் துறை தலைமை இயக்குனரான தங்களிடம் இருந்து எந்தவித உத்தரவும் அவர்களுக்கு தங்களிடம் இருந்து கிடைக்கப்பெறவில்லை என்று கூறுகின்றனர்.

ஆகையால் அரசியல் செல்வாக்கு இல்லாத சாமானிய நபர்களிடம் தமிழ் நாடு காவல் துறை நன்னடத்தை பிணைப்பாத்திரம் எழுதி வாங்கும் பொழுது, அரசியல் செல்வாக்கு மிக்க ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினைகளையும் அழைத்து முறையாக அவர்களிடம் நன்னடத்தை பிணைப்பத்திரத்தை எழுதி வாங்கி அவர்களை தேர்தல் சமயத்தில் எந்தவித குற்றச்செயலிலும் ஈடுபடுவதை தடுக்கும்படியும், மேலும் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உறுதி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த மனுவை குறிப்பிட்டிருந்தார்.

You may also like...