கொடநாடு விவகாரம். சுமார் 16 ஆண்டுகள் கழித்து நேற்று 23.03.2023-ம் தேதி வழக்கறிஞர் M.K.இளங்கோவன் குன்னூர் குற்றவியல் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டார்.

[3/24, 18:19] sekarreporter1: முன்னால் தமிழக முதலமைச்சர் செல்வி.J.ஜெயலலிதா அவர்களுக்கு சொந்தமான கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் எஸ்டேட் தரப்புக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வழி சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்தது குறித்து நீலகிரி மாவட்டம் குன்னூர் RDO அலுவலகத்தில் விசாரணை கடந்த 2007-ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. விசாரணையில் கொடநாடு எஸ்டேட் தரப்பில் M.K.இளங்கோவன் வழக்கறிஞராக ஆஜராகி வாதாடி வந்தார். கடந்த 20.09.2007-ம் தேதியில் RDO அலுவலகத்தில் நடந்த விசாரணையின் போது விசாரணையில் பதிவு செய்து கொண்டிருந்த சாட்சி வாக்குமூலத்தை எஸ்டேட் தரப்பு வழக்கறிஞர் M.K.இளங்கோவன் கிழித்தெறிந்ததாக அவர் மீது குன்னூர் டவுன் காவல் நிலையத்தில் குற்ற எண்.934/2007 இதச பிரிவுகள் 186 மற்றும் 353-ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்து. பின்னிட்டு வழக்கறிஞர் M.K.இளங்கோவன் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றிருந்தார். அதன்பின்பு வழக்கு விசாரணை தொடர்ந்து குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த சூழ்நிலையில் முன்னால் தமிழக முதலமைச்சர் செல்வி.J.ஜெயலலிதா மறைவுக்கு பின்னிட்டு கடந்த மாதம் இறுதி விசாரணை முடிவு பெற்று தனது தரப்பில் தனே ஆஜராகி வாதாடி வந்த சூழ்நிலையில், சுமார் 16 ஆண்டுகள் கழித்து நேற்று 23.03.2023-ம் தேதி வழக்கறிஞர் M.K.இளங்கோவன் குன்னூர் குற்றவியல் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டார்.
[3/24, 18:20] sekarreporter1: .

You may also like...