சனாதன பேச்சு சர்ச்சை தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் கோ வாரண்டோ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சனாதன பேச்சு சர்ச்சை தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் கோ வாரண்டோ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் இந்து மதத்திற்கு எதிராக பேசி வரும் திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவிகளில் நீடிக்கிறார்கள் என்று விளக்கம் அளிக்க உத்தரவிடக் கோரி, இந்து முன்னணி நிர்வாகிகள் மூவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில், திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுத்தரப்பில் ஆஜராகியிருந்த தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அவகாசம் கோரினார்.

உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது கம்யூனிஸ்ட் கட்சி என்றும், மனுதார் நிகழ்ச்சியின் முழு ஆதாரங்களை தாக்கல் செய்ய தவறியதால் வழக்கு நிலைக்கதக்கதல்ல தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஆதாரங்களை கேட்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனவும், தங்கள் மீது குற்றம் சாட்டிய மனுதாரர்கள் தான் அந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆதாரங்களை சமர்ப்பிக்காவிட்டால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும், இந்த விவகாரத்தை வைத்து, பாரதிய ஜனதா கட்சியினர் ட்விட்டரில் தனி விசாரணையை நடத்துகின்றனர் எனவும்,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலாக்குகிறார் எனவும் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில் பிரதான மனுவுக்கு பதிலளிக்க அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ராசா தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதி, விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

You may also like...