சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையத்தின் 18 ஆம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நீதிபதிகள் மகாதேவன், இளந்திரையன், அனிதா சுமந்த் உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலை வகித்தனர். விழாவில் பேசிய பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா , சமரச மையத்தில் சமரசர்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் அமைதியாகவும் வழக்குகளை கையாள வேண்டும்

வழக்குகளை பட்டியலில் சேர்க்க உத்தரவிடுங்கள் என்றே வழக்குகள் தொடரப்படுவதாகசென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையத்தின் 18 ஆம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நீதிபதிகள் மகாதேவன், இளந்திரையன், அனிதா சுமந்த் உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலை வகித்தனர். விழாவில் பேசிய பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ,
சமரச மையத்தில் சமரசர்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் அமைதியாகவும் வழக்குகளை கையாள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்திய நீதிமன்றங்களில் மூனரை கோடி முதல் நான்கு கோடி வரை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, வழக்குகளை பட்டியலில் சேர்ப்பதலிருந்து பைசல் செய்யும் நிறைய பிரச்சனைகள் உள்ளதாக குறிப்பிட்டார்.
இதனால் நீதித்துறை மீது மனுதாரர்களுக்கும் ஏன் வழக்கறிஞர்களுக்கு கூட நம்பிக்கை குறைந்து வருவதாக வருத்தம் தெரிவித்தார்.
வழக்குகளை பட்டியலில் போடுங்கள் என்று வழக்குகள் தொடரப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
மக்கள் தொகை பெருக்கம் காரணமாகவே வழக்குகள் அதிகமாவதாகவும்
சமரசமையங்கள், மத்தியஸ்தர்கள், நடுவர் மையங்கள் மூலம் வழக்குகளை தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். விழாவில் பேசிய நீதிபதி அனிதா சுமந்த் நேரடி வழக்கு முறை என்பது அலோபதி மருத்துவ முறை போல் என்றும் மாற்றுமுறை தீர்வு மையங்களை நாடுவது இந்திய மருத்துவ முறை போன்றது என்றும் குறிப்பிட்டார். நேரடியான நீதிமன்ற வழக்குகளில் உடனடி நிவாரணம் கிடைத்தாலும், பிரதான பிரச்சனை தீர்வு காண நீண்ட காலம் ஆகும் என்றார். அதே வேளையில் சமரச மையங்கள் மூலம் வழக்குகள் தீர்க்கப்பட்டால் அது நிரந்தர தீர்வாக அமையும் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், பொதுமக்களுக்கு சமரச மையம் தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் நீதிபதிகள் வழங்கினர். இந்த விழாவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உட்பட கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பலர் பங்கேற்றிருந்தனர்.

You may also like...