Supremecourt Advt Gs Mani: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன சமூக மக்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற சுதந்திரமான சிபிஐ அல்லது

[4/13, 13:36] Supremecourt Advt Gs Mani: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன சமூக மக்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற சுதந்திரமான சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி அடங்கிய நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு இந்த விவகாரத்தில் தகுந்த நேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க தவறிய அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்திரன் அவர்கள் தொடர்ந்த பொதுநல மனு இன்று 13.04.2023 சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் பாரத சக்கரவர்த்தி அடங்கிய அமரவில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மார்க்ஸ் ரவீந்திரன் தரப்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி எஸ் மணி வாதாடுகையில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் சமூக வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1989 சட்டப்பிரிவு 4 ன் படி பட்டியலின சமூக மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமை மற்றும் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை தக்க முறையில் தகுந்த நேரத்தில் விசாரணை செய்து 60 நாட்களுக்குள் இறுதிப் புலன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யாத போலீஸ் அதிகாரிகள் மீது 6 மாதம் காலம் முதல் ஒரு வருட கால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும். வேங்கை வயல் விவகாரத்தில் 100 நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை குற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு நபரையும் அடையாளம் காணவில்லை, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இதுவரையில் ஒரு நபர் கூட கைது செய்யப்படவில்லை, இறுதி புலன் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோறும் இந்த வழக்கையும், ஏற்கனவே ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்த வழக்கோடு இனைத்து விசாரிக்க உத்தரவிடுமாறு வாதிட்டார். வாதத்தை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கையும் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கோடு இனைத்து விசாரிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தனர்.
[4/13, 13:39] Supremecourt Advt Gs Mani: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கினை சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலணாய்வு குழு(SIT) விசாரணைக்கு மாற்றிட கோரியும்,சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மாண்புமிகு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.மார்க்ஸ் ரவீந்திரன் தாக்கல் செய்த பொதுநல வழக்கானது தலைமை நீதிபதி(பொ) டி.ராஜா மற்றும் பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(13.04.2023)விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதார்ர் தரப்பில் ஆஜரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி”பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை பாதுகாப்பு சட்டம்-1989 பிரிவு-4 உட்பிரிவு(e) ன்படி 60 நாட்களுக்கு வழக்கின் இறுதி அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்யவில்லை எனவும்,பிரிவு-4ன்படி வன்கொடுமையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,110 நாட்கள் கடந்த பின்னும் குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை,கைது செய்யப்படவில்லை எனவும்,எனவே வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என வாதாடினார்.வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் அவர்களை ஒரு நபர் ஆணையமாக விசாரிக்க உத்தரவு பிறப்பித்த வழக்கோடு இவ்வழக்கையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டு வழக்கினை தள்ளி வைத்துள்ளனர்.

You may also like...