தமிழக அரசு பணி நியமனங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கோரி மனு closed தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.சக்திவேல்

தமிழக அரசு பணி நியமனங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கோரி மனுவை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரை முதலில் மறுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பின்னர் சிபிசிஐடி காவல்துறையில் புகார் அளித்தது.

இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி, இடைத்தரகர் உள்ளிட்டோரை கைது செய்ததுடன், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாகவும் கண்டறிந்தது.

இந்த நிலையில், தேர்வாணையம் மட்டுமல்லாமல் அரசு போக்குவரத்து கழகங்கள், வேலைவாய்ப்பு துறை போன்வற்றின் தேர்வு நடைமுறைகளிலும் கூறி விழுப்புரத்தை சேர்ந்த என்.எஸ்.சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அரசு அதிகாரிகளுக்கு எதிரான சிபிசிஐடி விசாரணை என்பது கண்துடைப்பு நடவடிக்கையாகத்தான் இருக்கும் எனவும், அதனால் 2012ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பணி நியமனங்க குறித்து சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.சக்திவேல், அரசு தரப்பில் பிளீடர் P.முத்துக்குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.அனிதா, தேர்வாணையம் தரப்பு வழக்கறிஞர் ஆர்.பரணிதரன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

அப்போது, சிபிசிஐடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் D.புருசோத்தமனின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மட்டுமே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்ததாகவும், பின்னர் அவற்றை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதன்படி, அனைத்து ஆவணங்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அல்லது வேலைவாய்ப்பு துறை நியமனங்கள் தொடர்பாக எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கையை போன்றே தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

You may also like...