தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ்ஜை பணிமாற்றம் செய்யும் திட்டம் உள்ளதா என மார்ச் 15ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


    தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ்ஜை பணிமாற்றம் செய்யும் திட்டம் உள்ளதா என மார்ச் 15ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    காட்டு யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க கோரிய உள்ளிட்ட வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ்ஜை, அரசு ரப்பர் கழகத்துக்கு பணிமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தனக்கு தகவல்கள் வந்ததாக தெரிவித்தார்.

    வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்துக்கு உதவியாக இருந்த சேகர்குமார் நீரஜ்ஜை பணிமாற்றம் செய்தால், வனக்குற்றங்கள் தொடரான பல வழக்குகளின் விசாரணை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

    இதுகுறித்து அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்ட போது, சேகர்குமார் நீரஜ் பணிமாற்ற திட்டம் உள்ளதா என்பது தனக்கு தெரியாது எனவும், நாக்பூரில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்று திரும்பிய அவர், கொரோனா பாதிப்புக்குள்ளாகி, தற்போது வீட்டு தனிமையில் உள்ளதாக விளக்கமளித்தார்.

    இதையடுத்து, முதன்மை தலைமை வனப்பாதுகாவலரை, அரசு ரப்பர் கழகத்துக்கு பணிமாற்றம் செய்யும் திட்டம் உள்ளதா என்பது குறித்து மார்ச் 15ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...