தமிழ் நாடு பொது சொத்துக்கள் சேததடுப்பு சட்டம் அரசியல், மத ரீதியிலான ஊர்வலம் போன்றவை மட்டுமின்றி தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே ஏற்படும் தகராறுகளின் போது தனியார் அல்லது பொது சொத்துக்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டாலும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது*

*தமிழ் நாடு பொது சொத்துக்கள் சேததடுப்பு சட்டம் அரசியல், மத ரீதியிலான ஊர்வலம் போன்றவை மட்டுமின்றி தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே ஏற்படும் தகராறுகளின் போது தனியார் அல்லது பொது சொத்துக்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டாலும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது*

இரு தரப்பினருக்கு இடையே ஏற்படும் மோதலில் பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் போது, தமிழ்நாடு சொத்து சேதம் மற்றும் இழப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கும்போது உயர்நீதிமன்றத்தில்,
பல்வேறு வழக்கில் ஒவ்வொரு நீதிபதியும் முரண்பாடான உத்தரவுகளை வழங்கியிருந்தனர். ஒரு சில நீதிபதிகள் வழக்கு பதிவு செய்யலாம் என்றும் சில நீதிபதிகள் அரசியல் கட்சிகள், ஜாதிமத அமைப்புகள் போன்ற பொது அமைப்புகள் நடத்துகின்ற கூட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள் போன்றவைகளின் ஏற்படுகிற சேதத்திற்க்கு மட்டுமே இந்தசட்டம் பொருந்தும் என தீர்ப்பளித்திருந்தனர்.

முரண்பாடான இருவேறுப்பட்ட தீர்ப்புகள் உள்ளதால் இதனை தீர்வு காணும்பொருட்டு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் எல்.விக்டோரியா கவுரி அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி இந்த சட்டம் அரசியல் கட்சிகள் உள்ளிட்டவைகளின் போராட்டம், பேரணி, பொதுகூட்ட சமயங்களில் ஏற்படுகின்ற சேதத்திற்கு மட்டுமின்றி தனிப்பட்ட இரு தரப்பினர், அல்லது தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே ஏற்படும் தகராறுகளின் போது பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டாலும் தமிழ்நாடு பொது சொத்து சேதம் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் என்று பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதாடினார்.

நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் அரசியல் கட்சிகள் அல்லது வகுப்புவாத, மொழி அல்லது இன குழுக்களால் நடைபெறும் ஊர்வலங்கள், போராட்டங்கள், அல்லது பிற செயல்பாடுகளின் போது, பொது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கான பொறுப்பை ஏற்பாட்டாளர்கள் மீது நிர்ணயிக்கும் நோக்கத்தை அடைய இந்த சட்டம் வரையறுத்து உள்ளது. ஆனால்.அதே சமயம் இந்த சட்டம் தனியார் சொத்துக்களுக்கும் பொருந்தும் வகையிலும், தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்தையும் குற்றமாக்குவதே சட்டத்தின் நோக்கம் என்பது தெளிவாகிறது.

தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவதே சட்டமியற்றுபவர்கள் நோக்கம். எனவே அரசியல் கட்சிகள் உள்ளிட்டவைகளின் போராட்டம், பேரணி, பொதுகூட்ட சமயங்களில் ஏற்படுகின்ற சேதத்திற்கு மட்டுமின்றி, பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு தனி நபர்களால் ஏற்படுகிற சேதத்திற்கும் தமிழ்நாடு பொது சொத்து சேதம் சட்டத்தின்படி விசாரணை செய்யலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

You may also like...