தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு. delhi senior advts ஆன்லைன் ரம்மி case அதிரடி வாதம் no mhc adv

வெறும் யூகங்களின் அடிப்படையில் ஆன் லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக, அன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஆன் லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், திறமையை நம்பி பந்தயம் வைத்து விளையாடும் விளையாட்டு, சூதாட்டமாகாது. அதனால் பந்தயம் வைத்து விளையாடப்படும் திறமைக்கான விளையாட்டும் சூதாட்டமே என்ற தமிழக அரசு தரப்பு வாதம் ஏற்கத்தக்கதல்ல என்றார்.

ஆன் லைன் விளையாட்டுக்களை பொறுத்தவரை, ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்படும் என சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பில் கடுமையான விதிகள் சுய ஒழுங்குமுறையாக பின்பற்றப்படுகின்றன என தெளிவுபடுத்தினார்.

ஆன் லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது. ஒரே செயலை ஆன் லைனில் மேற்கொள்வது சட்டவிரோதம் எனவும், நேரில் மேற்கொள்வது என்பது சட்டப்படியானது எனவும் வகைப்படுத்த முடியாது என குறிப்பிட்டார்.

வெறும் யூகங்களின் அடிப்படையில், எந்த உண்மை தகவல்களும் இல்லாமல் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

ஆன் லைனில் விளையாட ஒரு மேடையை அமைத்து தரும் நிறுவனங்கள், அதற்கு கட்டணம் வசூலிக்கிறது. அந்த கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. வரியும் வசூலிக்கப்படுவதால், சூதாட்டம் நடத்துவதாக கூற முடியாது. ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி வாதத்தை நிறைவு செய்தார்.

மற்ற நிறுவனங்கள் தரப்பில், மொத்த தொகையில், ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் 16 சதவீதம் மட்டுமே கட்டணமாக பெறுகின்றன. ஆன் லைன் நிறுவனங்களின் தொழில் செய்யும் உரிமையை பாதிக்கச் செய்யும் வகையில் உள்ள இந்த சட்டம், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு சட்டத்தில், வயது கட்டுப்பாடு, நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன் லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த முடியாது என அரசு கூற முடியாது. ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து, அதை மீறினால் தடை செய்யப்படும் என சட்டம் இயற்றியிருந்தால் அதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆன் லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி பதில் வாதத்துக்காக வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 24ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

You may also like...