தலைவர் பதவிக்கு போட்டி யிடுகின்றவர்களில் ஒருவரான திரு மோகன்தாஸ்

வணக்கம் தமிழா,
நாள் 8.1.23.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல் வருகின்ற
9 .1.23 நாளில் நடைபெற
இருக்கிறது.

தலைவர் பதவிக்காக பன்முனைப்போட்டி நிலவி வருகிறது.

பல பதவிகளைப் பெறுவதற்கு பலர் போட்டியிடுகிறார்கள்.

இங்கே தலைவர் பதவிக்கு போட்டி யிடுகின்றவர்களில் ஒருவரான திரு மோகன்தாஸ் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.

எம்ஜிஆரின் நம்பிக்கையைப்
பெற்றகுடும்பத்தைச் சார்ந்தவர்.

வழக்கறிஞர் தொழிலில்
நேர்மையையும் அதே நேரத்தில் துணிவையும் கொண்டு இருப்பவர்.

பணத்துக்காக தான் ஏற்றுக்கொண்டு இருக்கின்ற தொழிலை அடமானம் வைக்க விரும்பாதவர்.

எம்ஜிஆர் மற்றும் ஜெ அவர்களிடம் அவரின் தாயாருக்கு இருந்த தொடர்பு என்பது மிகவும் நெருக்கம் சார்ந்தது.

அந்த நெருக்கத்தை பயன்படுத்தி தனக்கான
ஆதாயத்தை பெறு வதற்கு எந்த நேரத்திலும் முயற்சி எடுக்காத தன்னலம் விரும்பாத தமிழ் மகன்.

இவரது குடும்பம் மக்கள் சேவைக்காகவே தங்களை அர்ப்பணித்து
வாழ்ந்து வருகின்ற குடும்பமே மோகன்தாஸ் அவர்களின் குடும்பம்.

நான் ஒரு முறை நண்பரின் உரிமையியல் வழக்குக்காக அவரை அணுகி பணத்தை பற்றி கவலை இல்லை எனக்காக இந்த வழக்கில் ஆஜராகி நண்பருக்கு நீதியை பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன்.

ஆனால் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பரீசீலனை செய்து இந்த வழக்கில் ஆஜராக முடியாது என கூறிவிட்டார்.

பணத்துக்காக நான் சில
வழக்குகளை கையாளமாட்டேன் என்பதை எனக்கு வெளிப்படுத்தாமல் மறைமுகமாக எதிர்ப்பு
தெரிவித்து மறுத்தார்.

எனக்கு அவர் மீது வருத்தம் ஏற்பட்டது.

சிறிதுகாலம் கூட அவரோடு பேசாமல் தவிர்த்து இருந்தேன்.

இந்தியாவிலே இருக்கின்ற மிகப் பிரபலமான வழக்கறிஞர் களில் ஒருவராக இருக்கக் கூடிய சட்ட அறிஞரிடம் ஜுனியராக தனது வழக்கறிஞர் பணியை சிறு வயதில் தொடங்கிய மோகன் தாஸ் கடமை யோடு பணி செய்து வருவது
இந்தக்காலத்தில் ஆச்சரியமானது ஆகும்.

எம்ஜிஆர் வழியில் நேர்மையையும்,
வள்ளல் குணத்தையும் ஒருங்கே பெற்றவர்.

எது முடியுமோ அப் பிரச்சினையில் மட்டுமே
தனது கவனத்தை செலுத்தி தன்னை நம்பி வருகின்றவர்களுக்கு நம்பிக்கையாக தொழிலில் பய பக்தியோடு அக்கறை எடுத்துக்கொண்டு தான்
செல்லும் பயணத்தை தூய்மையாக நெஞ் சுறுதியோடு அமைத்து கொடுத்து சமூகத்துக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் வெற்றிப் படிக்கட்டுகளாக செயல் பட்டு வரக்கூடியவர்.

தூய்மையான எண்ணம்
நேர்மையான சிந்தனை எளிமையான அனுகு முறை, அனைவரிடம் பழகும் தன்மை மோகன்தாஸ் அவர்களுக்கே உரித்தான பண்பாகும்.

வழக்கறிஞர் தொழிலில்
பலரது செயல்பாடுகள்
கண்ணியக்குறைவாக இருக்கின்ற இந்தக் காலத்தில் நடை முறை களை மாற்ற வேண்டும் என்ற சித்தாந்தத்தை கொண்டிருப்பவர்.

இவர் தனது குருவாக ஏற்றுக் கொண்ட வழக்கறிஞர் சட்ட மேதையான திரு கே சுப்பிரமணியன் அவர்களை முழு மூச்சாக கடவுளுக்கு ஒப்பாக நினைத்து அவரைப் போலவே சமூகத்தின் உயர் வுக்காக தன்னை அர்ப்பணித்து வருவது
பெருமை தரத்தக்கது ஆகும்.

பணத்தின் மீது சிறு அக்கறை இல்லாமல் இருப்பது இக்காலத்தில்
எவரும் உண்டோ?

அந்த அக்கறையில் சிறிதும் நாட்டமில்லாத
நற்பண்புகளை உடையவர் ஏ.மோகன்தாஸ் அவர்கள்.

நான் தேடிச்சென்று வழக்காடுவதற்கு உரிமையாக நின்று கோரிக்கை வைத்தபோது நிராகரித்தவர்.

இதே வழக்கை இன்னொரு வழக்கறிஞரிடம் சென்று முறையிட்ட போது சில லட்சங்களை
பெற்று மூன்று ஆண்டுகளாக நீதி மன்றத்தில் வழக்கே நடத்தாமல் ஏமாற்றி வருகின்ற நிகழ் வெல்லாம் நாங்கள் அனுபவித்து வரு கின்றோம்.

அப்படிப்பட்டவர்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்ற இத் தொழிலில் மோகன் தாஸ் அவர்கள்
நேர்மையாக இருப்பது அவரை நண்பராக கொண்ட எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.

அந்தப் பெருமையின் சிறப்பை அனைவரும்
அறிந்துகொள்ளும் வகையில் மோகன்தாஸ்
அவர்களுக்கு வழக்கறிஞர்கள் அனைவரும் சிறப்புச் செய்து பெருமை கொள்ளவேண்டும் என்பதை தெரிவித்துக்
கொள்கிறேன்.

கம்யூனிஷ்ட் கட்சியின்
என் டி வானமாமலை வழக்கறிஞர் மற்றும் முன்னாள் வழக்கறிஞர்
தலைவர் கருப்பன் அவர்களை தனது மானசீக குருவாக மற்று இருவரை ஏற்றுக் கொண்டு அவர்களது வழியில் பின்தொடர்ந்து செல்லுகின்ற ஏமோகன்
தாஸ் அவர்களுக்கு வழக்கறிஞர்கள் அன்பர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு ஆதரவினை அவருக்கு நல்கி பெருவாரியான வாக்குகளை செலுத்தி வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

பம்பாயில் மிகப் பிரபலமாக கோலோச்சி வந்த தமிழரான
வரதராஜ முதலியார் என்பவர் ஆவார்.

இவர் ஒருமுறை என் டி வானமாமலையை அனுகி தனது வழக்கில்
ஆஜராக வற்புறுத்தி இருக்கிறார்.

கொலைகாரர்களுக்கு ஆஜராக மாட்டேன் என்ற
கொள்கையில் உறுதி யானவர் இவர். ஆகவே மறுத்து இருக்கிறார்.

மன்றாடி இருக்கிறார் இவரது வாதத் திறமையால் நாம் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கொண்டு வந்தவருக்கு வான மாமலையின் மறுத் தளிப்பு ஏமாற்றத்தை கொடுத்தது.

பணத்தை மூட்டையாக கட்டிக்கொண்டு வந்தவருக்கு அதிர்ச்சி.

நாம் பணத்தை அள்ளிக்கொடுக்க தயாராக இருந்தும் நம்மை ஏற்றுக் கொள்ள
மறுக்கிறாரே? என்ற ஏமாற்றத்தை தாங்கிக் கொண்டு அவரின் நேர்மையை எண்ணி இமயமென புகழ்ந்தார் வரதராஜ முதலியார்.

இவரைப்போன்று கருப்பன் என்ற வழக்கறிஞரும் நேர்மையை தொழிலில் கடைபிடித்து வழக்கறிஞர் தொழிலுக்கு புகழ் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது வழியில் நேர்மையாக தொழிலில்
கவனம் செலுத்தும் மோகன்தாஸ் வழக்கறிஞர்களின் பிரச்சினைகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து போராடக் கூடிய துணிவை பெற்று
இருப்பவர்.

நேர்மையான வாதத் திறமையும்,போராடக் கூடிய துணிச்சலையும் வல்லமையாக ஒரு சேர
பெற்றிருப்பவர் திரு.மோகன்தாஸ் அவர்கள்.

வாஜ்பாய் அரசாங்கத்தில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்கள் வக்கீல்கள் சங்கத் தலைவராக இருந்த கருப்பன் அவர்கள் தலைமையில் உயர்நீதி மன்றத்தில் மோகன்தாஸ்க்கு பாராட்டுக்கூட்டம் நடத்தி
அவரது போர்க் குணத்தை பற்றி பறை சாற்றி எழுச்சியுரை யாற்றி பெருமைப் படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.இது
வழக்கறிஞர்கள் மத்தியில் சிறப்புப் பெற்றது என்பதை அனைவரும் மறந்து இருக்கமுடியாது?

கடந்த திமுக ஆட்சியில் நடந்த நீதிமன்ற கல வரத்தில் மோகன்தாஸ் தலைமையில் நடந்த போராட்டம் என்பது எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்
வகையில் அமைந்தது என்பது வழக்கறிஞர்கள் மத்தியில் அவருக்கு தனிப்பட்டசெல்வாக்கை உயர்த்தியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆகவே வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் போட்டியிடக் கூடிய திரு ஏ. மோகன்தாஸ் அவர்களை தலைவராக
தேர்ந்தெடுக்குமாறும் அதே வேளையில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி யிடக்கூடிய ஆர்.பிரபு வழக்கறிஞர் அவர்களையும் தேர்ந் தெடுத்து வாக்களித்து
வழக்கறிஞர் தொழிலுக்கு பெருமை
சேர்க்குமாறு அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

தேர்தல் நாள்- 9.1.23.

நன்றி..
வணக்கம்,

சுப.கார்த்திகேயன்,
தனித் தமிழர்சேனை.

You may also like...