திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்கள் காளிராஜ் மற்றும் டில்லி ஆகியோருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்கள் காளிராஜ் மற்றும் டில்லி ஆகியோருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பிப்ரவரி 19ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் தேர்தலின்போது திமுகவை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டு பின்னர் அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கில் ஜெயக்குமாருடன் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகரான காளிராஜ் மற்றும் டில்லி ஆகியோர் இரண்டு பேர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள் .

நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது திருச்சியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், அங்குள்ள கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரத்திற்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

You may also like...