துணை வேந்தர்கள் நியமன வழக்கு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் துணைவேந்தர்களை கவர்னர் நியமனம் செய்கிறார். இந்த நியமனத்தில் என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது என்று கோரி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா நீதிபதி ஆதிகேவலு முன்பு விசாரணைக்கு வந்த்து.அப்போது தமிழக சார்பாக அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகி கூறியதாவது தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர் நியமிப்பதற்கு கவர்னருக்கு இருந்த அதிகாரத்தை பறித்து தமிழக அரசே இனிமேல் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் என்று தமிழக அரசு ஒரு சட்டத்தை இயற்றி அதை சட்டசபையில் நிறைவேற்றி இதற்கு ஒப்புதல் பெற தமிழக கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது தற்போது ஒப்புதலுக்காக தமிழக கவர்னர் மாளிகையில் கோப்புகள் காத்திருக்கிறது என்று கூறினார் இதை நீதிபதிகள் ஏற்று கொண்டு பொதுநலன் வழக்கை தள்ளுபடி செய்தனர்

You may also like...