தேர்தலில் வாக்களிக்காதவர்களை தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்றும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது cj bench asg சுந்தரேசன் argunts accepted

தேர்தலில் வாக்களிக்காதவர்களை தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்றும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த குமரேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் இந்தியாவில், நாடாளுமன்ற தேர்தல்களின் போது, 70 சதவீத வாக்குப்பதிவை கூட தாண்டுவதில்லை எனவும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து தேர்தல்கள் நடத்தும் போது ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கிராமப்புறங்களில் பெரும்பான்மை மக்கள் வாக்களிக்கும் நிலையில், ஜனநாயக கடமையை ஆற்றாத நகர்புற மக்கள், அரசின் பலன்கள், சலுகைகளை அனுபவிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவதுடன், வாக்களிக்காதவர்களை தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இதுசம்பந்தமாக நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தனிநபர் மசோதா நிராகரிக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் தெரிவித்தார்.

வாக்களிப்பது தனிநபர்களின் தனிப்பட்ட சுதந்திரம் என தமிழக அரசு பிளீடர் முத்துகுமார் தெரிவித்தார்.

இதையடுத்து, குறிப்பிட்ட வகையில் சட்டம் இயற்றும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும், அதற்கு தங்களுக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

You may also like...