நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாக கூறி 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.

வருமானத்தை மறைத்ததற்கான ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, 2022 ஆகஸ்டில் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில், அபராதம் விதித்ததற்கான காரணங்களை விளக்கி வருமான வரித்துறை தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, விஜய் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று, விசாரணையை அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

You may also like...