நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 564.48 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் அகமதுபுகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 564.48 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் அகமதுபுகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜி மற்றும் அதன் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி ஆகியோர் மீது நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 564.48 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கடந்த 2018ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

குறிப்பாக 2011-12 மற்றும் 2014-15 ஆண்டுகளில் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரியை உயர்தர நிலக்கரி என ஏமாற்றி மோசடியாக அரசுக்கு விற்பனை செய்து குற்றத்தில் ஈடுபட்டதாக வருவாய் புலனாய்வு இயக்ககம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. அதன் மூலம்
சட்ட விரோதமாக மோசடி செய்து கோடிக்கணக்கான பணத்தை அகமது புகாரியின் வெளிநாட்டு நிறுவனங்களில் பரிமாற்றம் செய்துஅதை மீண்டும் இந்திய நிறுவனங்களுக்கு, சட்ட விரோதமாக பணம்பரிமாற்றம் செய்ததையும் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பண பரிமாற்றசட்டத்தின் கீழ் அகமது புகாரியின் நிறுவனத்துக்கு சொந்தமான பணத்தை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில் அவர், ஜாமினில் விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் 21 ம்தேதி ஒத்திவைத்துள்ளார்.

You may also like...