நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன். தவறு செய்யும் கைதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தனிமைச் சிறையில் அடைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. Adv Nathiya for petner

[28/03, 20:56] sekarreporter1: https://youtu.be/50BxKkCqNnw?si=6JsFEKB8YdCSP4T3
[28/03, 21:24] sekarreporter1: தவறு செய்யும் கைதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தனிமைச் சிறையில் அடைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த ரோஷன் சல்மா, என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், விசாரணை கைதியாக கடந்த நான்கு ஆண்டுகளாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவர் முகமது ரிப்பாஸ்-சை சிறை காவலர்கள் கண்ணன், சதீஷ் மற்றும் முரளி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை , காவலர்கள் ஷூ கால்களால் சரமாரியாக தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறை காவலர்கள் தாக்கியதில், முகமது ரிப்பாஸ் பலத்த காயமடைந்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, சோதனையின் போது ரிப்பாஸ் சிறை அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, ரிப்பாஸ் தற்போது தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரால் சிறை காவலர்களையும், சக கைதிகளை கூட அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும்
தெரிவித்தார்.

இதையடுத்து, சிறை கைதிகள் ஏதேனும் தவறு செய்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். மாறாக, விதிகளை மீறி ஏன் தனிமை சிறையில் அடைக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், ரிப்பாஸை தனிமை சிறையில் இருந்து மாற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...