நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர். கலைமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஏ.குமார் ஆஜராகி வாதிட்டார். மணப்பாக்கம் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய மனுவை பரிசீலிக்க வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மணப்பாக்கம் குளத்தில் உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய மனுவை பரிசீலிக்க வேண்டும்
அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை,
சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர் எஸ்.ராமலிங்கம். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
இயற்கை அறக்கட்டளை என்ற பெயரில் நீர்நிலைகளை சுத்தம் செய்து பராமரிக்கும் சமூக பணிகளை செய்து வருகிறேன்.
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள மணப்பாக்கத்தில் 0.91 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. தற்போது, 0.61 ஏக்கர் அளவில்தான் இந்த குளம் உள்ளது. இந்த குளத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். இவர்கள், கழிவு நீரை இந்த குளத்தில்தான் விடுகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு இந்த குளத்தை சுத்தம் செய்து சுமார் 30 டன் கழிவுகளை வெளியில் எடுத்தோம். அந்த குளத்தை சுற்றி மரங்களை வளர்த்து வருகிறோம். தற்போது 6 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. ஆனால், குளத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளவர்கள் கழிவு நீரை விட்டு குளத்தை மாசுப்படுத்துகின்றனர். எனவே, இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குளத்தை பாதுகாக்கவும் கோரி அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர். கலைமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஏ.குமார் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, மனுதாரர் கொடுத்துள்ள மனுவை அரசு பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள உத்தரவிட்டனர்.
……………

You may also like...