an unprecedented defamation Original Suit filed against 3 IAS officers/ Secretary to Government by Mr. A. Ramachandran IFS through his Learned Counsel M. Ravi in view of the serious prejudice deliberately caused to him in denying & delaying his promotion and retirement benefits, Hon’ble Justice N. Satish kumar in the petition filed by Government for Condonation of delay in filing written statement awarded Rs. 10000 as cost, as the

[1/11, 10:16] sekarreporter1: In an unprecedented defamation Original Suit filed against 3 IAS officers/ Secretary to Government by Mr. A. Ramachandran IFS through his Learned Counsel M. Ravi in view of the serious prejudice deliberately caused to him in denying & delaying his promotion and retirement benefits, Hon’ble Justice N. Satish kumar in the petition filed by Government for Condonation of delay in filing written statement awarded Rs. 10000 as cost, as the reason for delay is not convincing.
[1/11, 10:16] sekarreporter1: தலைமை வனக்காப்பாளர் பதவிக்கான ஓய்வூதிய பலன்களை வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில், பதிலளிக்காமல் காலதாமதம் செய்த தமிழக அரசுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த ராமச்சந்திரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1981ம் ஆண்டு உதவி வனக்காப்பாளராகவும், 1989ம் ஆண்டு முதல் வனக்காப்பாளராக பணியை தொடர்ந்ததாக
குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம் குறித்து முனைவர் பட்டம் பெற்று பல்வேறு நாடுகளுக்கு இந்திய பிரதிநிதியாக பங்கேற்றிருப்பதாகவும், அண்ணா பல்கலைகழகத்தில் காலநிலை மாற்றம் தொடர்பாக புதிதாக தொடங்கப்பட்ட மையத்திற்கு இயக்குநராக 2008லிருந்து 3 ஆண்டுகளுக்கு
நியிமிக்கப்பட்டதாகவும், பல்கலைக்கழகம் விடுத்த கோரிக்கையை ஏற்று 2011ல் மேலும் 3 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், தலைமை வனக்காப்பாளராக பதவி உயர்வு வழங்க தகுதி இருந்தும், அரசு பதவி உயிர்வு வழங்கவில்லை. தனக்கு பதவி உயர்வு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி மத்திய நிர்வாகவியல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் 3 மாதங்களில் தேர்வு குழு உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டது. ஆனாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பல போராட்டங்களுக்கு பிறகு 2020ல் தேர்வுக்குழு தலைமை வனக்காப்பாளராக பதவி உயர்வு வழங்க பரிந்துரை செய்தது. ஆனால், தனக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வு வழங்காமல் இருந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தனக்கு ஏற்பட்ட மன உலைச்சலுக்கு இழப்பீடாக 1 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம். ரவி ஆஜராகி, அரசு சார்பில் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால் ஓய்வூதிய பணபலன்களை பெற முடியவில்லை என குற்றம் சாட்டினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யவில்லை. அதனால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை ஒருவாரம் ஒத்திவைத்தார்.

You may also like...