நீதிபதிகள் D.கிருஷ்ணகுமார், P.B.பாலாஜி புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் implead case.

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் 2018ல் அளித்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி அது குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 டிசம்பரில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டதுடன், இந்த முறைகேடு தொடர்பாக சேகரித்த ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கும்படியும், ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படியும் 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.

அதனடிப்படையில், இது சம்பந்தமாக விசாரணை நடத்த அனுமதி அளித்து 2018ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து முக ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்தது.

இதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கில் தன்னை இணைக்க கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் D.கிருஷ்ணகுமார், P.B.பாலாஜி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவற்றை பெற முடியாது என்பதால், தனக்கு நீதி வழங்கும் வகையில், இந்த மேல் முறையீட்டு வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும் என ஜெயவர்த்தன் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், கடந்த 2018ம் ஆண்டு தான் அளித்த புகார் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பர் என நம்பிய நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பின், காவல் துறையினர் நிறம் மாறி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஜெயவர்த்தனை வழக்கில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், விசாரணை ஆணையம் நடத்திய விசாரணையில் பிரமாண பத்திரங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டதாகவும், சாட்சிகள் விசாரணை நடைபெறவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் இருப்பதால் மேல் முறையீட்டு வழக்குகளை வாபஸ் பெற அரசு முடிவு செய்துள்ளதாகவும், ஜெயவர்த்தன் 2018ம் ஆண்டு அளித்த புகார் மீது விசாரணை நடத்தி, அதை முடித்து வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கில் ஜெயவர்த்தனை இணைக்க வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய, அவர் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

 

[9/26, 16:39] sekarreporter1: https://youtu.be/yhJOz2M84EE?si=slvDUI9Gc2nIDuQV
[9/26, 18:19] sekarreporter1: https://youtu.be/yhJOz2M84EE?si=slvDUI9Gc2nIDuQV
[9/26, 18:19] sekarreporter1: https://www.youtube.com/live/nui2C1bF-s8?si=i_s0QlYEM_a2Z5Gc
[9/26, 19:57] sekarreporter1: https://youtu.be/Tmv-vpbwvNc?si=s0I3wMDX0jqavF4H

 

 

You may also like...