நீதிபதி அனிதாசுமந்த் , கொடூரமான நாய்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

கொடூரமான நாய்களை ஏற்றுமதி செய்யவும் இறக்குமதி செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு கடிதம் அனுப்பியது. இதற்கு தடை விதிக்க கோரி   கெனல் கிளப் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்த போது. கெனல் கிளப் சார்பாக மூத்த வக்கீல் சீனிவசான் ஆஜராகி,

இன நாய்களை மூர்க்கமானவை மற்றும் மனித உயிருக்கு ஆபத்தானவை என வகைப்படுத்தும் முடிவு தவறானது, அறியாமை மற்றும் அபத்தமானது,.

கெட்ட நாய்கள் இல்லை. மோசமான உரிமையாளர்கள் மட்டுமே உள்ளனர். எந்த இனத்தின் நாயையும் பயிற்றுவிக்கலாம், சமூகமயமாக்கலாம் மற்றும் நட்பாக மாற்றலாம். அதேபோல், எந்த நாயும் பயிற்சி பெறாமல் விட்டுவிட்டால் அல்லது பராமரிக்கப்படாமல் இருந்தால் அல்லது துஷ்பிரயோகம் செய்தால் மனிதர்களுக்கு மூர்க்கமாகவோ அல்லது ஆபத்தானதாகவோ மாறும், மத்தியஅரசின் கடிதத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதை கேட்ட நீதிபதி அனிதாசுமந்த் , கொடூரமான நாய்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். இதில் மத்திய மாநில அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

You may also like...