நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை ஐகோர்ட கிளை for 3 months judge jayachandren 482

தானாக முன்வந்து வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை ஐகோர்ட கிளைக்கு மாற்றப்பட்டார்.

சென்னை ஐகோர்ட், மதுரை ஐகோர்ட் கிளையை சேர்த்து மொத்தம் 75 நீதிபதி இடங்கள் உள்ளது. இதில் தற்போது பணியாற்றும் நீதிபதிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் இலாகா ஒதுக்கப்படும். இதை தலைமை நீதிபதி ஒதுக்குவார். அதுபோல மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை சென்னை ஐகோர்ட்டுக்கு வருவார்கள்.

இந்த இலாகா ஒதுக்கீடு முறை நேற்றுடன் முடிந்தது. இதனால் அக்டோபர் 3ம்தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை 3 மாதங்களுக்கு இரு கோர்ட்டுகளிலும் பணியாற்றக்கூடிய நீதிபதிகளின் புதிய இலாகா ஒதுக்கீடு செய்த தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அறிவித்தார். இதில் அமைச்சர் பொன்முடி, கே.கே.எஸ்,ஆர். தங்கம் தென்னரசு , பெரியசாமி ஆகியோர் மீதான வழக்குளையும் முன்னாள் அமைச்சர்கள் பன்னீர் செல்வம், வளர்மதி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை மீண்டும் தானாக முன் வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். தற்போது அவர் மதுரை ஐகோர்ட்கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு பதில் நீதிபதி ஜெயசந்திரன் எம்பிஎம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டில் அமர்ந்து விசாரிக்க உள்ளார். ஆனந்த் வெங்கடேஷ் விட்டு சென்ற அனைத்து வழக்குகளையும் இவர் தான் டிசம்பர் வரை விசாரிப்பார்

You may also like...