நீதிபதி சி.திருமகள் order 5 years தண்டனை கஞ்சா case

பூக்களுக்கிடையே கஞ்சாவை பதுக்கிவைத்திருந்த வழக்கில் கைதான இளைஞருக்கு 5 அண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் கண்ணகி நகர் மயானம் அருகே கஞ்சாவை கடத்தி விற்பனைக்காக வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலையில் 31ம் தேதி கண்ணகி நகர் காவல் நிலையத்தினர் சோதனை நடத்தினர்.

அப்போது ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த 26 வயதான நந்தகுமார் என்பவர் பூக்களை வைத்திருந்த குச்சி பைகளில், 2 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், நந்தகுமாரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணை நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானதாக கூறி நந்தகுமாருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

You may also like...