நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, முதல்வராக இருந்த பழனிச்சாமிக்கு எதிராக உள்நோக்கத்துடன் செய்து வெளியிடப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையிலேயே 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதுquashed.

கள்ள நோட்டு வழக்கில் கைதானவருடன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்காக, இணையதள செய்தி நிறுவனத்தின் மீது கோவை காவல்துறை பதிவு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

டெய்லி ஹன்ட் என்கிற இணையதள செய்தி நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டு கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் கைதானவருடன் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடன் இருக்கும் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டது கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறி, கோவை மாநகராட்சி கவுன்சிலர் அசோக்குமார் என்பவர் கோவை மாவட்டம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் டெய்லி ஹண்ட் இணையதளத்தை நடத்திவரும், வீர் சே (Ver Se) இன்னோவேசன் என்கிற தனியார் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய் கூறி அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வீரேந்திர குமார் குப்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, முதல்வராக இருந்த பழனிச்சாமிக்கு எதிராக உள்நோக்கத்துடன் செய்து வெளியிடப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையிலேயே 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் பல்வேறு செய்தி நிறுவனங்களின் செய்தியை எடுத்து தங்கள் இணையதளத்தில் பதிவிடுவதே தங்களது பணி என்றும், அதன்படியே விகடன் டாட் காம் இணையதளத்தில் வந்த புகைப்படத்தையே பயன்படுத்தியதாகவும், முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது ஆளுங்கட்சியாக இருந்தவர்களின் துஷ்பிரயோகமாக தெரிவதாக குறிப்பிட்டுள்ளார். புகைப்படத்தில் காணப்படும் எந்தவொரு நபரிடமிருந்தும் எந்த மறுப்பும் இல்லாத நிலையில், குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர் என கூறி, அந்த புகைப்படம் தனது மனதிலும், கட்சி தொண்டர்களின் மனதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி மற்றும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை ஆகியவை சம்பந்தப்பட்ட நபரால் மறுக்கப்படாதபோதும், எவரும் பாதிக்கப்படாதபோதும் ​ புகாரளிக்க மூன்றாம் நபருக்கு இடமில்லை என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் வீர் சே இன்னோவேசன் நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.

You may also like...