வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, மூர்த்தி மற்றும் முருகவேல் ஒன்றாக தான் மது அருந்த சென்ற நிலையில்,முருகவேல் மட்டும் தனியாக வெளியே வந்ததாக சாட்சிகள் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, முருகவேல் தான் கொலை செய்திருக்கிறார் என காவல் துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக கூறி, முருகவேலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்ததுadd pp babu muthumeeran .

மதுபானம் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் நண்பர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் தங்கியிருந்து அப்பகுதிகளில் குப்பை சேகரித்து வந்த மூர்த்தி மற்றும் முருகவேல் ஆகியோர்,கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுபானம் அருந்துவதற்காக நசரத்பேட்டையில் உள்ள கல்லறைத் தோட்டத்துக்கு சென்றுள்ளார்கள்.

அங்கு,மதுபானத்தை பங்கீடுவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.இதில் மூர்த்தியை கீழே தள்ளிவிட்ட முருகவேல், அருகில் கிடந்த சுமார் 25 கிலோ கல்லை தூக்கி மூர்த்தியின் தலையில் போட்டு கொன்றுவிட்டு தலைமறைவானார்.

பின்னர், இதுசம்பந்தமாக வந்த தகவலின் அடிப்படையில், நசரத்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மறுநாள் முருகவேலை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம், முருகவேலுக்கு கொலை குற்றச்சாட்டின் கீழ் ஆயுள் தண்டனை விதித்து 2018ல் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.சந்தரப்பம் சாட்சிகளின் அடிப்படையில் மட்டும் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கேட்டு கொண்டார்.

மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, மூர்த்தி மற்றும் முருகவேல் ஒன்றாக தான் மது அருந்த சென்ற நிலையில்,முருகவேல் மட்டும் தனியாக வெளியே வந்ததாக சாட்சிகள் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, முருகவேல் தான் கொலை செய்திருக்கிறார் என காவல் துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக கூறி, முருகவேலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

மேலும் முருகவேல் தற்போது ஜாமீனில் உள்ளதால், தண்டனையை அனுபவிக்கும் வகையில் அவரை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

You may also like...