புறம்போக்கு land s m s j order

புறம்போக்கு நிலத்தை பல்லாண்டுகளாக அனுபவித்துவிட்டு, பொது மக்களின் தேவைக்காக அரசு பயன்படுத்தும் போது எதிர்ப்பதை ஏற்க முடியாது சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் 4 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட உள்ள நிலம், தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறி கஸ்தூரிபாய் காந்தி கன்யா குருகுலம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.எஸ்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, குறிப்பிட்ட நிலம் மனுதாரரருக்கு ஒதுக்கப்படவில்லை என்றும், அரசு நிலத்தை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் வாதிட்டார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை எந்த கட்டணமும் செலுத்தாமல் பல்லாண்டு காலமாக அனுபவித்துவிட்டு, பொது மக்களின் தேவைக்காக புதிய பேருந்து நிலையம் அமைப்பதை எதிர்ப்பதை ஏற்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...