மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை ஒன்றிய அரசின் பட்டியலில் இருந்து பொதுப்பட்டிய்லுக்கு மாற்றுதல் தொடர்பாக திரு பி.வில்சன் மாநிலங்கவையில் இன்று கொண்டு வந்த சிறப்புத் தீர்மானம்!

மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை ஒன்றிய அரசின் பட்டியலில் இருந்து பொதுப்பட்டிய்லுக்கு மாற்றுதல் தொடர்பாக திரு பி.வில்சன் மாநிலங்கவையில் இன்று கொண்டு வந்த சிறப்புத் தீர்மானம்!
————————————
1931ம் ஆண்டு முதல் எந்தவொரு சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பும் ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்படாத நிலையில், 2015 ம் ஆண்டு ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்ட சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை.. 1992 ம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்திருத்தம் உள்ளாட்சித் தேர்தல்களில் எஸ்.சி/ எஸ்.டி/ பெண்களுக்கு கட்டாய இட ஒதுக்கீடுகளை வழங்கின.. ஆனால், ஓபிசி பிரிவினருக்கு இயல்பின் தன்மையே நீடித்தது.. உள்ளாட்சி அமைப்புகளில் மாநிலங்கள் இந்த இடஒதுக்கீட்டினை அளிக்க இந்த விதிகளை செயல்படுத்தியபோதும்,அவை அனுபவத் தரவுகள் தேவை என்ற அடிப்படையில் நீதிமன்றங்களால் தடுக்கப்பட்டன..
பிரிவு 342-ஏ(3) இன் கீழ் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களின் பட்டியலை வரைவதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் இருந்தாலும், மக்கள் தொகை கணக்கெடுப்பானது ஒன்றிய அரசின் பட்டியல் என்பதால், அதை நடத்திட ஒன்றிய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
இதனால், மிகப்பெரிய சமூகத்திற்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சட்டப்பூர்வ பங்கானது மறுக்கப்படுகிறது.
அனைவருக்கும் நலத்திட்டங்களை வழங்குவதற்குக் கூட மாநிலங்களால் சாதி மற்றும் சமூக ரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பினை மேற்கொள்ள இயலாத நிலையில், இதனை ஒன்றிய அரசின் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது இன்றியமையாதது.

You may also like...