மத்திய அரசு சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர். எல் சுந்தரேசன்  ஆஜராகி, கலாஷேத்திரா கல்லுாரி மாணவிகள் சார்பாக புகார்கள் கொடுத்தால் அதுபற்றி விசாரிக்க புதிய கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது.

கலாஷேத்திரா கல்லுாரி விவகார வழக்கு நீதிபதி சேஷசாயி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசு சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர். எல் சுந்தரேசன்  ஆஜராகி, கலாஷேத்திரா கல்லுாரி மாணவிகள் சார்பாக புகார்கள் கொடுத்தால் அதுபற்றி விசாரிக்க புதிய கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது. அதன்படி உடனடியாக விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதை கேட்ட நீதிபதி வழக்கின் அடுத்த கட்ட விசாணையை வருகிற 25ம் தேதிக்கு ஒத்தி வைத்து அன்றைக்கு பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பாக ஆஜரான வக்கீல் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

You may also like...