மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிலையான மற்றும் மருத்துவ நெறிமுறைப்படியே சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிலையான மற்றும் மருத்துவ நெறிமுறைப்படியே சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக அப்பல்லோ மருத்துவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவர்கள் நரசிம்மன் மற்றும் பால் ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர். மருத்துவர்களிடம் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது , ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 29,30 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் எக்மோ கருவி பொருத்தப்படுவது தேவையா என ஆலோசிக்கப்பட்டதாகவும், அப்போது தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டதாகவும் மருத்துவர் பால் ரமேஷ் வாக்கு மூலம் அளித்தார். அதனை தொடர்ந்து வாக்குமூலம் அளித்த மருத்துவர் நரசிம்மன், டிசம்பர் 1, 2016 அன்று அதாவது ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பாக ஜெயலலிதாவை சந்தித்தாகவும், நலமுடன் தான் இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்

You may also like...