மாண்புமிகு தமிழக முதல்வர் முதன்முதலாக பதவியேற்ற பிறகு காணும் முதல் திருமண நாள் விழா. 1975ஆம் ஆண்டு இருபதாம் தேதி ஆகஸ்ட் மாதம் சென்னையில் உள்ள அண்ணா சாலையில் உம்மிடி

மாண்புமிகு தமிழக முதல்வர் முதன்முதலாக பதவியேற்ற பிறகு காணும் முதல் திருமண நாள் விழா. 1975ஆம் ஆண்டு இருபதாம் தேதி ஆகஸ்ட் மாதம் சென்னையில் உள்ள அண்ணா சாலையில் உம்மிடி பத்மாவதி திருமண மண்டபத்தில் மாண்புமிகு தளபதிக்கு திருமணம் நடைபெற்றது. அன்றைய கழக பொதுச்செயலாளர் நாவலர் அவர்களுடைய தலைமையிலும் கழகப் பொருளாளர் ஆருயிர் பேராசிரியர்கள் உடைய முன்னிலையிலும் திருமணம் நிகழ்ந்தது. இந்நிகழ்வு வரலாற்றில் முத்திரை நாள். இந்நன்னாளில் தலைவர் அவர்களின் துணைவியார் எழுதிய அவரும் நானும் என்ற நூலினை நினைவு கூறுகிறேன்.

இந்த நூலில் தளபதி அவர்களின் அக வாழ்க்கை மற்றும் புற வாழ்க்கையை விவரமாகவும் நுணுக்கமாக எழுதியுள்ளார். மறக்கமுடியாத மனப்பதிவுகளை மற்றும் தளபதியோடு தானும் இணைந்து பயணித்த பயணங்களையும் தெளிவாக சித்தரித்துள்ளார். பொதுவாழ்க்கையில் அதாவது அரசியல் குடும்பம் எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடிகளை மற்றும் சவால்களை மற்றும் கடினமான கால கட்டங்களையும் இனிய நினைவுகளையும் இந்த நூலின் படைத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழ் இல்லங்களில் தவழ வேண்டிய இந்நூல் ஒரு அற்புத நூல். வரலாற்றுப் பெட்டகம் இந்நூல்.

தமிழ் இல்லங்கள் மகிழும் நாள் இந்நாள்.

மங்களகரமான இந்நாள்
தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாள்.

வணங்கி மகிழும்
ப. சஞ்சய் காந்தி
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

You may also like...