மேகலாயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியிலிருந்து ஓய்வு பெறும் நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் வாழ்த்து

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி தற்போது மேகலாயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியிலிருந்து ஓய்வு பெறும் நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் வாழ்த்து
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீதித்துறையில் ஒரு சகாப்தத்தை நீங்கள் வெற்றிகரமாக முடித்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.
நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை நிலைநிறுத்த நீங்கள் வழங்கிய முக்கிய தீர்ப்புகள், நமது நாட்டின் துடிப்பான ஜனநாயகக் கொள்கைகளுக்கு அற்புதமான மற்றும் மகத்தான பங்களிப்பாகும்.
நேர்மையான, அச்சமற்ற வழக்கறிஞராக, நீதிபதியாக, தலைமை நீதிபதியாக, குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீதித்துறை நிர்வாகத்தை அலங்கரித்து, தமிழக மக்களின் அன்பையும் பாசத்தையும் பெற்றுள்ளீர்கள்.
இந்த நாட்டின் ஒவ்வொரு சாமானிய மனிதனுக்கும் அச்சம் அல்லது யாருடைய தயவு இல்லாமல் நீதியை உறுதி செய்வதை, இளைய தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய ஒரு முன்னோடி நீங்கள் என நான் கருதுகிறேன்.
இந்து சமய அறநிலையத்துறை (HR & CE) சட்டத்தின் கீழ் மாநில அளவிலான ஆலோசனைக் குழுவின் தலைவராக முதலமைச்சர் இருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இந்த நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு மற்றும் மதச்சார்பின்மை என்பது பிற மதங்களையும் சகித்து செல்வதுதான் என்பதை குறிக்கிறது” என்ற உங்களது பொன்னான கருத்து எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
மதத்தை பின்பற்றும் உரிமை வாழ்வுரிமைக்கு உட்பட்டது, வாழ்வுரிமையே அச்சுறுத்துலுக்கு உள்ளாகும்போது என்ன செய்வது என கருத்தை பார்த்து வியப்படைகிறேன்..
இன்று- தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள ஓபிசி மாணவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் மருத்துவபடிப்பில்
ஓபிசி ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நீங்கள் வழிகாட்டியதன் பலனை ஓபிசி மாணவர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர்.

இப்போது நீங்கள் ஓய்வு பெறும்போது, நீதித்துறை ஒரு நேர்மையான நீதிபதியை இழந்துள்ளது. இதுவரை நீங்கள் வழங்கிய முக்கிய தீர்ப்புகள் பல்வேறு துறைகளில் பல்வேறு உரிமைகளை நிலைநிறுத்தியுள்ளன . அரசியலமைப்பு உரிமைகளின் பாதுகாவலராக இருத்துள்ளீர்கள்..
கொரோனா தொற்றுநோய்க் கால கட்டத்தில் தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜனை ஒன்றிய அரசு சமமாக அனைவருக்கும் வழங்குவதை உறுதிசெய்தீர்கள்…
நீங்கள் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான ஓய்வு வாழ்க்கை மற்றும் ஓய்வுக்குப் பிந்தைய உங்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற நான் முழு மனதுடன் வாழ்த்துகிறேன்.

You may also like...