வன்னியர் சங்க கட்டிடம் chief justice court தடை

கோவிலுக்காக குத்தகைக்கு கொடுக்கப்பட்ட அரசு நிலத்தை, வன்னியர் சங்கத்திற்கு விற்ற விற்பனை பத்திரம் செல்லத்தக்கதல்ல என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலையில் உள்ள 41,952 சதுர அடி நிலம், தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ள காசி விஸ்வநாதர் தேவஸ்தானத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டு, செயல்பட்டுவந்தது. இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி, பல்லாவரம் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் இன்று காலை அங்கிருந்த வன்னியர் சங்க கட்டிடத்துக்கு அரசு சீல் வைத்தது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் திருக்கச்சூர் கே.ஆறுமுகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்தவரும் இந்த வழக்கில் விசாரித்து நீதிமன்றம், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும், கட்டிடத்தை இடிக்க கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த மனுவுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த பதில்மனுவில், ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்த உடனே இ்நதவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப நிலையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தின் மீது உரிமை கோரும் மனுதாரர், அதற்கு ஆதாரமாக எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை எனவும், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நிலம் தேவையாக உள்ள நிலையில், தனியார் நிலத்தை கையகப்படுத்த 300 கோடி ரூபாய் செலவாகும் எனவும், அரசு நிலத்தை பயன்படுத்தும் போது, 300 கோடி ரூபாய் மிச்சப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது எனவும், கோவில் நிலத்தை குத்தகைக்கு பெற்றவர், அதை வன்னியர் சங்கத்திற்கு விற்றுள்ளதாகவும், இந்த விற்பனை பத்திரம் செல்லத்தக்கதல்ல என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுளளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கையும் நாளை மறுநாளைக்கு (ஆகஸ்ட் 24) தள்ளிவைத்த நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீட்டித்தும், வன்னியர் சங்க விடுதியில் மாணவர்கள் யாரையும் சேர்க்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

You may also like...