09/05, 07:14] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1788384454450491884?t=05n-fMdpF_27VQEDXucInA&s=08[09/05, 07:14] sekarreporter1: [09/05, 03:06] Sethu Sir Dinamalar: ஐந்து வயதிற்குமேல்அந்தக்கரங்களைபற்றிக்கொள்ளமறந்தே போனேன்

[09/05, 07:14] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1788384454450491884?t=05n-fMdpF_27VQEDXucInA&s=08
[09/05, 07:14] sekarreporter1: [09/05, 03:06] Sethu Sir Dinamalar: ஐந்து வயதிற்குமேல்
அந்தக்கரங்களை
பற்றிக்கொள்ள
மறந்தே போனேன்

பத்து வயதிற்குமேல்
பிஞ்சு பாதங்களுடன்
பயணம் போகும்
நினைவே வரவில்லை

பதின் பருவத்தில்
அந்த இதயம் எழுப்பிய
ஆர்வக் கேள்விகள்
காதுகளில் விழவே இல்லை

காலங்கள் நரைத்தபின்
ஞானங்கள் பிறக்கின்றன
உறவின் கரங்களை பற்றிகொண்டு
நாடுகள் சுற்ற தோன்றும்

தூரமாய் தொலைந்து மறந்த
பால்யம் திரும்ப வருமா
தீர்ப்புகள் எழுதப்படாமலேயே
வாழ்வின் குற்றங்கள் புரிகிறது

பணிகளின் சுமைகளில்
தன்னையே தொலைத்த
தந்தைகளின் வலிகளை
வரலாறு சொல்வதே இல்லை

பிழைக்கத் தெரியாதவர்களின் பிள்ளைகள்
தங்கள் பாதைகளை
தாங்களே அமைத்துக்கொள்ள வேண்டும்
என்பதே கலிகாலத்தின் தீர்ப்பு

நெருப்பில் உருகி வழியும்
அந்த கேக்கில் இருந்து கிளம்பும்
புகைகூட சொல்ல கூடும்
காலங்கள் எவ்வளவு கடினமானவை

இந்த பூமிக்கு நம்மை புரிய வைக்க
நாட்கள் போதாது
காதுகளில் விழும் அற்ப கேள்விகளுக்கு
பதிலளிக்க வார்த்தைகள் போதாது
நம்ம மனசுக்கு நேர்மையா இருந்தா போதும்
அதுதான் கடவுள்!

ராஜவல்லிபுரம் சேது
9.5.2024
[09/05, 07:08] sekarreporter1: 👍

You may also like...